செய்திகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள் – வேலன் சுவாமிகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள்.நாங்கள் அனைவரும், சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குப்படுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்.அத்துடன் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாதென வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என தெரிவித்துள்ளார்.(15)