செய்திகள்

பொன்சேகாவின் ஜனநாயக கட்சி அலுவலகம் மட்டக்களப்பில் திறப்பு(படங்கள்)

பீல்ட்மார்சல் சரத்பொன்சேகாவின் கட்சியான ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனநாயக்கட்சியின் தலைவர் பீல்ட்மார்சல் சரத்பொன்சேகா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக பீல்ட்மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜனநாயகக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஜனநாயகக்கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள,ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிருப்பு தொகுதி,மட்டக்களப்பு தொகுதி,கல்குடா தொகுதி ஆகியவற்றினை இணைத்ததாக இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கட்சியின் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனநாயகக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திருமதி சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு –திருமலை வீதியில் இலங்கை போக்குவரத்துசபை சாலைக்கு முன்பாக இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

IMG_0012 IMG_0020 IMG_0022 IMG_0023