செய்திகள்

பொரளை பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

பொரளை பகுதியில் அண்மையில் முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை  பொலஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேநக நபர்கள் இருவரும் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் பொரளை பகுதியை சேர்ந்தவர் எனவும், மற்றையவர் நாவல பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர். கடந்த 30ம் திகதி குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.