செய்திகள்

பொறுமை இழந்து வரும் மைத்திரி

“அபித் வெடட பஹினவா” என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்று – இரண்டு வாரங்களுக்கு முன்னர் தேசிய நிறைவேறு சபையில் அவர் சொன்ன இந்த கருத்து – இன்று சிங்கள ஊடக பரப்பில் மிகவும் பிரசித்தமாகி விட்டது. “அபித் வெடட பஹினவா” என்றால் “நாமும் காரியத்தில் இறங்குவோம்” என்று அர்த்தமாகும்.

நிறைய எதிர்ப்புகளையும், குத்து வெட்டுகளையும் சந்தித்த ஒருவர், இறுதியில் பொறுமை இழந்து சொல்லும் கூற்று இதுவாகும்.  இதுதான் இன்று மைத்திரியின் நிலைமை.

கடந்த காலங்களை போல், வாக்குறுதி வழங்கிவிட்டு, பதவிக்கு வந்து, பின்னர் வாக்குறுதிகளை உடைத்த ஜனாதிபதிகளைப்போல் தனது பெயரும் சரித்திரத்தில் இடம்பெற கூடாது என்பதில் மைத்திரி உறுதியாக இருக்கிறார். இதில் அவரது நேர்மை பலராலும் மெச்சப்படுகிறது.

ஆனால், நேர்மைகொண்ட நல்லவராக மாத்திரம் இருந்து பிரயோஜனம் இல்லை. சூதுவாது, சாணக்கியம் தெரிந்த வல்லவராகவும் இருக்க வேண்டும் என்ற ஆலோசனையை இப்போது மைத்திரி ஏற்றுக்கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது.

ranil-maithri-chanrikaஅதன் முதற்படிதான், “நாமும் காரியத்தில் இறங்குவோம்” என்ற பிரகடனமாகும். இதையடுத்தே அவர் தடாலடியாக ஐந்து பிரபல முன்னாள் அமைச்சர்களை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்தியக்குழுவில் இருந்து தூக்கியதாகும். இவர்கள் உள்ளே இருந்து மகிந்தவுக்கு ஆள் பிடித்தவர்கள். இதையடுத்து எதிர்வரும் மேதினத்தை, தங்கள் பலப்பரீட்சை களமாக பயன்படுத்த மைத்திரி முடிவு செய்து காரியத்தில் இறங்கியுள்ளார்.

19ம் திருத்தம் முழுமையாக அனைத்து நிறைவேற்று அதிகாரங்களையும் நீக்காவிட்டலும் கூட அந்த திசையை நோக்கி திட்டவட்டமாக நகர்கிறது.   இதில் பத்து விகித்தை கூட இதற்கு முன் வந்த எந்த ஒரு ஜனாதிபதியும் செய்யவில்லை என்பது மைத்திரியின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு. இன்று கடும் நிலைப்பாட்டில் இருக்கும் மைத்திரி, 19ம் திருத்தத்திற்கு தேவையான வாக்குகளை அளிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பீக்கள் முன்வராவிட்டால், உடன் பாராளுமன்றத்தை கலைப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார். இதற்கு மேலும் இதை தொடரவிட்ட்டால் அது, மஹிந்தவுக்கே வாய்ப்பாக முடியுமென மைத்திரி நினைக்கின்றார்.

ஆனால், அவருடன் கூட இருப்பவர்கள் மெல்ல, மெல்ல நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதும், மறுபறம் ரணிலின் செயற்பாடுகள்  இதற்கு எப்படி ஊறு விளைவிக்கும் காரணியாக அமைகிறது என்பதும் சுவாரசியமான நடப்புகளாகும்.

ரணிலின் சூதாட்டம்

ஒரு மனிதன் சந்திக்கும் அனுபவங்களே அவனையோ, அவளையோ, உருவாக்குகின்றன என்பது உண்மைதான் போலும். தனது அனுபவம் கற்று தந்த பாடங்களை அடிப்படையாக கொண்டு ரணில் விக்கிரமசிங்க இந்த வயதிலும் தைரியமாக சில உள்ளக மற்றும் வெளியக அரசியல் சூதாட்ட முயற்சிகளை முன்னெடுக்க முடிவு செய்து காரியத்தில் இறங்கி விட்டார்  என்று தோன்றுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரண்டு முறை போட்டியிட்டும், பலமுறை போட்டியிடாமலும் கோட்டைவிட்ட ரணில், தற்போது தனது உள்ளக முயற்சியாக எப்பாடு பட்டாவது நிறைவேற்று பிரதமர் பதவியையாவது இருக்க பிடித்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என முயல்கிறார்.

ranil-19ம் திருத்தம் என்ற அரசமைப்பு திருத்த மசோதாவில்,  “நிறைவேற்று பிரதமருக்கான அதிகார ஷரத்துகள்” பலவற்றை ரணில் செருகியிருந்தார். 19ம் திருத்தம் என்று வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்டு அது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் கூட, இந்நோக்கில் பல புதிய ஷரத்துகளை மந்திரிசபை அங்கீகரித்து இருந்தது. ஜனநாயக வரம்பை மீறாமல் நீதித்துறைக்கு முக்கியத்துவம் வழங்கி அவற்றையும்  நீதிமன்றத்துக்கு சட்டமாஅதிபர் மூலம் ரணில் சமர்பித்து இருந்தார். இந்த ஷரத்துகள் அனைத்தும் ஜனாதிபதிக்கு இப்போது இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்களை சத்தமில்லாமல் பிரதமருக்கு மாற்றும் முயற்சிகளாகும்.

எனினும் காலம் அவருடன்  இல்லை.  ரணில் எடுத்த இந்த உள்ளக முயற்சிகள் பிசுபிசுத்து விட்டன. இவற்றை சட்டமாக்க பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது, பொது வாக்கெடுப்பு அவசியம் என்று நீதிமன்றம் கூறி தீர்ப்பளித்து  விட்டது.  பொது வாக்கெடுப்பு என்பது ஏறக்குறைய இன்னொரு ஜனாதிபதி தேர்தல் போன்றதாகும். அதை நடத்தி அரசியல் தற்கொலை செய்ய ஆளும் அணியில் ரணில் உட்பட எவரும் தயார் இல்லை. எனவே இன்று ஏனைய பொதுவான ஷரத்துகளை கொண்டே இந்த 19ம் திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகிறது.

ரணில் எடுத்த வெளியக முயற்சிகள் என்ன? அவை மிகப்பெரிய அரசியல் சூதாட்டமாக அரசியல் பரப்பில் இன்று பேசப்படுகிறது.

ஒன்று, மகிந்த அரசியலை விட்டு அகல்கிறார் என்று முடிவு எடுத்து அந்த வெற்றிடத்தை சிங்கள மக்கள் மத்தியில் நிரப்ப எடுத்த முயற்சியாகும். இந்த அடிப்படையிலேயே சமீபகாலமாக ரணில் சிங்கள பெருந்தேசியவாத கருத்துகளை பேசத்தொடங்கியதாகும்.

இதன் ஒரு கட்டமாகவே அவர் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுடன் மோதினார். அவரை ஓர் பொய்யன் என்றும், இனவாதி என்றும், சொல்லி, பின்னர் தொடர்ந்து முறையான விசாரணை அல்லது தேடி பார்க்க அவகாசம் கூட வழங்காமல் சடுதியாக இரகசிய தடுப்பு முகாம்கள் கிடையாது என்று சொல்லி காணாமல் போனோர் குடும்பங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கினார். தனது மருமகன் துணையமைச்சர் ருவன் விஜெவர்தனவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வடக்கில் இருந்து இராணுவம் வாபஸ் வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்ல வைத்து, விக்னேஸ்வரனுடன் சண்டையை ஆரம்பித்தார். பின்னர் தமிழக மீனவர்களை சுட்டுதள்ளுவேன் என்றும் கூறினார்.

இவற்றையெல்லாம் செய்து சிங்கள மக்களை கவர ரணில் எடுத்த முயற்சிகள், வெற்றி பெறவில்லை. சிங்கள ஊடகங்கள் ரணிலின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் கடும் சிங்கள தேசிய பொதுஜன அபிப்பிராயம் கொண்டவர்களை ரணில் கவர்ந்ததாக தெரியவில்லை. இதன்மூலம் அவர் மறுபக்கத்தில்  கணிசமான தமிழ் தரப்பு ஆதரவை இழந்துள்ளார் என்றே சொல்ல வேண்டியுள்ளது.

இதையெல்லாம்விட முக்கியமான விடயம், மகிந்த ஒன்றும் அரசியல் அஞ்சாதவாசம் செய்து சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தவில்லை. வெற்றிடம் ஏற்பட்டால்தானே அதை நிரப்பும் தேவை ஏற்படும். எனவே ரணிலின் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டது.

ரணிலின் அடுத்த முயற்சியே மிகப்பெரும் சூதாட்டம். மகிந்த, கோதா, பசில், நாமல், யோஷித ஆகிய ராஜபக்ச குடும்பத்தவர்களுக்கு எதிராக எந்த ஒரு சட்ட மற்றும் போலிஸ் விசாரணை நடவடிக்கைகளை எடுக்க விடாமல் ரணில் காப்பாற்றி வருகிறார் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. இதன்மூலம் ராஜபக்சவை இன்னொரு அணியாக தேர்தல் களத்தில் போட்டியிட வைத்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்கு வங்கியை பிரித்து, ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதே அவரது நோக்கம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மைத்திரி, சந்திரிக்கா ஆகியோரது தலைமையில் போட்டியிட, நாமளுக்கு நயமனம் வாங்கினால் போதும் என்று மகிந்தவும் ஒதுங்கி கொண்டு வழிவிட, அத்தகைய ஒரு நிலைமை, தமக்கு சாதகமானது அல்ல என்று ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது கட்சியின் பிரதானிகள் சிலர் நினைக்கின்றார்கள். ஆகவே மகிந்தவை, அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெரும் நிலைமைக்கு தள்ளிவிடக்கூடாது என்று இவர்கள் முடிவு எடுத்து  செயல்படுகிறார்கள். ராஜபக்ச குடும்பத்தவர் மீது குற்றச்சாட்டுகள் குவிந்தால், அவர்கள் அரசியலில் இருந்து ஓரம் கட்டப்படுவார்கள். எனவே இப்போதைக்கு அவர்கள் மீதான விசாரணைகள் கொஞ்சம் ஒதுங்கி இருக்கட்டும் என்பது ரணிலின் கணக்கு.

இது உண்மை என்று சந்திரிக்கா மற்றும் ராஜித ஆகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்னோடிகளே குற்றம் சாட்டும் அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது.  இது ஒரு பெரிய சூதாட்டம் அல்லவா? இந்த திட்டம் கொஞ்சம் பிசகினாலும், மீண்டும் எழுந்து வந்து மைத்திரி, சந்திரிக்கா, ரணில் மற்றும் மைத்திரியின் வெற்றிக்கு துணையிருந்த தமிழ், முஸ்லிம்  கட்சிகளையும் ஒருசேர தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு  தன்னை மீண்டும் இலங்கையின் ஆட்சியாளராக  நிலைப்படுத்திக்கொள்ள முடியாதவர் அல்ல, மகிந்த ராஜபக்ச  என்று நடுநிலையாளர்கள் எடுத்து சொல்வதை ரணில் காதில் வாங்கிக்கொள்ள தயாரில்லை.

சோமவன்சவின் விலகலின் பின்னால் சீனா ?

ஜேவீபி, இன்று அனுரகுமார தலைமையில் கொஞ்சம் தலையை தூக்கி வரும் வேளையில், ஒரு தடாலடி குண்டு விழுந்துள்ளது. அதன் முன்னாள் தலைவரும், அரசியல் குழு உறுப்பினருமான சோமவன்ச அமரசிங்க, கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சியை அமைக்கவுள்ளதாக கூறியுள்ளார். சோமவன்ச விலகி புது கட்சியை அமைத்து பெரிய ஆளணியை ஏற்படுத்தும் சத்தியம் இல்லை. ஆனால், இது ஜேவீபிக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை அடையாளம் ஆகும். இதற்கு பின்னால் மகிந்தவும், சீனாவும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

somawansa_amarasinghaஇன்றைய அரசின் இந்திய சார்பு போக்கு சீனாவை எரிச்சல் அடைய செய்துள்ளது. அதுபோல் ஜேவீபியின் இன்றைய அரசு சார்பான அல்லது மகிந்த எதிர்ப்பு போக்கும் சீனாவை எரிச்சல் அடைய செய்துள்ளது. இதையெல்லாம் அடையாளப்படுத்தும் நோக்கிலேயே இந்த பிளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என அரசியல் அவதானிகள் சொல்கிறார்கள். உண்மையில் முரண்பாடுகள் இருந்தாலும் கூட , அவற்றை  பகிரங்கப்படுத்த சோமவன்ச எடுத்துக்கொண்டுள்ள இன்றைய சூழ்நிலை நியாயமற்றது. கடந்த காலங்களில் ஜேவீபியில் இருந்து விலகிய எல்லோர் மீதும் ஜேவீபிபலத்த குற்றச்சாட்டுகளை சுமத்தியது. ஆனால், இந்த முறை சோமவன்சவுக்கு எதிராக இதுவரை ஜேவீபி  இதுவரை குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை. எங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றதான் இதுவரை அவர்கள் சொல்கிறார்கள். எனவே விலகிய சோமவன்ச என்ன குற்றச்சாட்டுகளை சுமத்த போகின்றார் என்பதை பொறுத்தே அடுத்த கட்டம் தெளிவாகும்.

பறிபோகும் சிறுபான்மை பிரதிநிதித்துவம்

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் ரகசியமாகவும், பகிரங்கமாகவும் கடைபிடிக்கும் கொள்கைகள் சிறுபான்மை கட்சிகள் இன்று பொறுமை இழந்து வருகின்றன. அரசை மாற்றி நாட்டை காப்பாற்றி கொடுக்க பெரும் பங்களிப்பு வழங்கினால், கடைசியில் இவர்கள் எங்கள் தலையிலேயே கை வைக்கின்றார்கள் என்று ஒரு சிறுபான்மை கட்சி தலைவர் நேற்று ஒரு சிங்கள வானொலியில் கடுமையாக பேசினார்.

இன்று கொழும்பில் கூடும் சிறுபான்மை கட்சி தலைவர்கள், இது தொடர்பில் கடுமையான ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. இதில் விசேடம் என்னவன்றால், சிறுபான்மை கட்சிக்கள் என்று பாரமால், சிறு கட்சிகள் என்று சிங்கள கட்சிகளும் இந்த சந்திப்பில்கலந்துக்கொள்ள உள்ளதாகும். எனினும் உள்ளக பிரச்சினைகளில் சிக்கியுள்ள ஜேவிபி இதில் கலந்து கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் பேசும் மக்களுக்கான இந்த பிரதிநிதித்துவங்களை காப்பாற்றி நிலைநிறுத்த, அனைத்து கட்சிகளையும் கூட்டிணைக்கும் முயற்சியில், ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், டக்லஸ் தேவானந்தா, சுமந்திரன், விக்கிரமபாகு ஆகியோர் முன்னணி வைக்கின்றார்கள்.

உலக நாயகன்