செய்திகள்

பொலிஸாரை கத்தியால் குத்திய நபர் கைது

பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேக நபர் உட்பட மூவர் மூளாய் மாவடிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் குறித்த பகுதிக்கு நேற்று மாலை சென்றுள்ளனர். சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று அவரைக் கைதுசெய்யமுற்பட்டவேளை அவர் பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அங்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது கத்தியால் குத்திய சந்தேகநபர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.