செய்திகள்

பொலிஸார் பயணித்த வாகனம் விபத்து: ஒருவர் பலி, 10 பேர் காயம்

பசறை – புத்தல வீதியின் 14 ஆம் கட்டை பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

வைபவமொன்றில் கலந்துகொண்ட பின்னர் திரும்பி வந்துகொண்டிருந்த புத்தல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் சிலர் பயணித்த வாகனமே விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து20.06.2015 அன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 9 பொலிஸாரும் வேனின் சாரதியும் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

vlcsnap-2015-06-20-13h54m03s233