செய்திகள்

பொலிஸ் சார்ஜனின் எலும்புக்கூடு மீட்பு

கடந்த 2012ஆம் ஆண்டில் காணாமல் போனதாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் எலும்புக்கூடு, பட்டிபொல காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த எலும்புக்கூடுக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பையொன்றிலிருந்த அடையாள அட்டையைக் கொண்டே, உயிரிழந்திருப்பவர் பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினர்.

தலாவ, அருணபுர பகுதியைச் சேர்ந்த குணபால பிரசாத் புஷ்பகுமார (வயது 49) என்ற மேற்படி பொலிஸ் சார்ஜன்ட், இறுதியாக ஹெட்டிபொலி பொலிஸ் நிலையத்திலேயே கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.