செய்திகள்

பொலிஸ் நடமாடும் சேவை

பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின் பணிப்புரைக்கமைய பொலிஸ் நடமாடும் சேவை ஒன்று  இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிந்தக்க விஜயசிங்க தலைமையில் நோர்வூட் சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

 இந்த நடமாடும் சேவையில் அடையாள அட்டை, பிறப்புச்சான்றுதல், பொலிஸ் அறிக்கை முறைபாடு ஏற்றுகொள்ளல், கர்ப்பிணி தாய்மார்களுக்கு செயலமர்வு, வைத்திய முகாம் இடம் பெற்றதோடு கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசனை பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

  அத்தோடு நோர்வூட் பிரதேசத்தில் பாடசாலைகளுக்கு செல்லாமல் இருந்த 50 மாணவர்களை இணங்கண்டு அவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ததோடு அவர்களுக்கு நோர்வூட் பொலிஸாரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

IMG_2641 IMG_2666 IMG_2592 IMG_2603 IMG_2617 IMG_2618