செய்திகள்

போகோ ஹராம் தாக்குதலில் 100 பேர் பலி

நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தின் தலைநகரான மைதுகிரியில் நேற்று போகோ ஹராம் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 97 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் “மைதுகிரியின் குகாவா கிராமத்தில் உள்ள மசூதி மற்றும் அப்பாவி பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 97 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து  மீட்கப்பட்டுள்ளது. படு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.