செய்திகள்

போக்குவரத்து சபைக்கு 1425 லட்சத்தை செலுத்துமாறு மகிந்தவுக்கு கடிதம் மூலம் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த அரசாங்கத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்காக  1425 லட்சம் ரூபாவை செலுத்த வேண்டும்.
இந்த தொகையை அவருக்கு செலுத்தமாறு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக உள்ளூர் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நான் பதவி ஏற்றபோது 1925 லட்ச ரூபாய் இலங்கை போக்குவரத்து சபைக்கு செலுத்தவேண்டி இருந்தது. நான் குழம்பி போய்விட்டேன் இந்த நட்டத்தை எப்படி ஈடுகட்டுவேன் என்று.
ஆராய்ந்து பார்த்ததில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது சொந்த தேவைக்காக அரசாங்க சொத்துக்களை பயன்படுத்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது மக்களின் சொத்து அவர்களுக்கே சென்றடைய வேண்டும். இதில் 500 லட்ச ரூபாயை மட்டுமே அவர்கள் செலுத்தியுள்ளார்கள். மீதியை செலுத்துமாறு அவருக்கு சட்டரீதியாக கடிதம் மூலம் அறிவித்துள்ளோம் என்றார்.
பதுளையில் நடந்த கூட்டமொன்றில் அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.