செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் ,வர்தகத்தில் ஈடுபடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை வழங்க ஜனாதிபதி யோசனை

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனையை செயற்படுத்தும்வகையில் சமூக கருத்தாடலொன்றை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் அவர்களின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு மரணதண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மான மொன்றுக்கு வரவிருப்பதாகவும் ஜனாதிபதி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற உலக புகைத்தல் ஒழிப்பு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். “மரணதண்டனையை மீளக்கொண்டு வருவதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்படலாம். ஒருவரை கொலை செய்வது பிரச்சினைக்கான தீர்வாகாது என கடந்த காலங்களில் உள்நாட்டிலேயே கூறப்பட்டிருந்தது
எவ்வாறாயினும் நாட்டில் ஒழுங்கு முறையை பேணுவது மிகவும் முக்கியமானது. ஆட்சிசெய்யும்போது மெச்சத்தக்க செயற்பாடுகளும், விமர்சிக்கப்படும் செயற்பாடுகளும் இடம்பெறலாம். சமூகவிரோதிகளின் கைகளில் நாடு சிக்கிக்கொள்வதைத் தடுக்கும் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாது. புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து நிலைமை மோசமடைந்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்துவதில் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதன்படி அதனை தடுக்க போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மரணதண்டனையை செயற்படுத்தும்வகையில் சமூக கருத்தாடலொன்றை முன்னெடுக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.