செய்திகள்

போருக்குப் பிந்திய நல்லிணக்கம்:தனிமைகள் கடந்து சிந்தித்தல்

பிரெஞ்சு மொழி பேசும் குவெபெக் மாகாணத்தில் பிரிவினைவாதத் தேசியத்தின் எழுச்சி உருவாக்கிய கனடாவின் அரசியல், அரசியல் யாப்பு நெருக்கடியின் பின்னணியில் எழுதுகையில், சால்ஸ் ற்றெய்லர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

ஹியூ மக்லெனனின் “இரு தனிமைகள்” இன்னமும் கனடாவின் ஒரு அடிப்படை யதார்த்தமாக உள்ளன. இரு குழுக்களும் தமது இக்கட் டுக்களையும் தமது பிரச்சனைகளையும் தமக்குப் பொதுவான நாட் டையும் கருதும் விதங்கள் வெகுவாக வேறுபடுவதால் ஒரு பொது மொழியைக் காண்பது கடினமாயுள்ளது. ஒன்றின் மேல் மற்றதைப் பொருத்த இயலாதபடி, மிக வேறுபட்ட பார்வைக் கோணங் களிலிருந்து எடுக்கப்பட்ட, ஒரே பொருளின் இரு வேறு புகைப்படங் கள் போல அவை உள்ளன (வுயலடழசஇ 1993:24).

சால்ஸ் ற்றெய்லர், அநேகமாகக், கனடாவில் இன்றுள்ள முதன்மை யான கல்விசார் அரசியற் சிந்தனையாளரும் மெய்யியலாளருமாவார். 1970இல் “அரசியலின் கோலங்கள்” (வுhந Pயவவநசn ழக Pழடவைiஉள) எனும் ஏட்டில் வெளிவந்த “கனேடிய எதிர்காலம்” எனும் அவருடைய கட்டுரையிலிருந்து மேற்படி மேற்கோள் பெறப்பட்டது. ஹியூ மக்லென னைப் பற்றிய ற்றெய்லரின் குறிப்பு முன்னவரின் “இரு தனிமைகள்” என்ற 1945இல் வெளியான நாவலைப் பற்றியது. சென்ற நூற்றாண்டின் முற் தசாப்தங்களில் ஆங்கிலம் பேசும் கனேடியன் ஒருவனுக்கும் பிரெஞ்சு பேசும் கனேடியன் ஒருவனுக்கும் இடையே தொடர்பாடலும் ஒருமையுணர்வும் அசாத்தியமாக இருந்தமையைப் பதிவாக்கும் அந் நாவல், இனத்துவ அடையாளத்தின் மீதான ஆழ்ந்த பற்றுதல்களில் ஊட்டம் பெறும் தனிமைகளைப் பற்றியது.

மே 2009இல் நெடுங்காலம் இழுபட்ட போரின் முடிவுக்குப் பின்பான இலங்கை, 1970இல் சால்ஸ் ற்றெய்லர் வருணித்த கனடாவினின்று வேறுபட்டதல்ல. போர் முடிந்து ஐந்தாண்டுகள் கடந்த போருக்குப் பிந்திய இலங்கையிலும் சிங்களவர்களதும் தமிழர்களதும் தனிமைகள் ஒரு அடிப்படை யதார்த்தமாகவே தெரிகின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் (ஐ.ம.சு.கூ.) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (த.தே.கூ.) ஒரு பொருளுள்ள நடைமுறைக்கொத்த அரசியற் தொடர் பாடலை மேற்கொள்ள இயலாதபடி அவை “… தமது இக்கட்டுக் களையும் தமது பிரச்சனைகளையும் தமக்குப் பொதுவான நாட்டையும் கருதும் விதங்கள் வெகுவாக வேறுபடுவதால் ஒரு பொது மொழியைக் காண்பது கடினமாயுள்ளது”. அவர்கள் ஒருவரோடொருவர் பேசிவந்துள்ள போதும் அவர்கள் உரையாடவில்லை. மீண்டும் மாற்ற இயலாதவை யாகிவிட்ட தத்தமது அரசியல் நிலைப்பாடுகளை மீள நிலைநாட்டி வலியுறுத்துமாறான பகிரங்க அறிவித்தல்கள் மூலம் அவை பேசி யுள்ளன. அச்சொட்டாக முன்னர் அமைதிப் பேச்சுக்களின் போது நிகழ்ந்தது போல, இரு தரப்பினரும் பரஸ்பர வேறுபாடுகளையும் ஐயங்களையும் அச்சங்களையும், பகைமைகளையுங் கூட, மீளக் கண்டறிந்தும் மீள உண்டாக்கியுமுள்ளனர். இணங்குதலன்றித் தனிமை களுட் பின்வாங்குதலே அரசியலின் விருப்பிற்குரிய வழியாயுள்ளது.
போருக்குப் பிந்திய இலங்கையில் இணக்கம் ஏன் இத்துணை கடின மாகவுள்ளது? இந்த அளிக்கை இவ் வினா பற்றிச் சிந்திக்கிறது.

இனத்துவத் தனிமைகளின் நனவு அனுபவவியல்


போருக்குப் பிந்திய இணக்கம் ஏன் இத்துணை கடினமாகவுள்ளது என விளங்குவதிலிருந்து தொடங்குவோம். போட்டியிடும் இனத்துவத் திட்டங்களிடையே அரசியற் பகிர்விற்கான புதிய கற்பனைகள் ஏலவே யிருப்பதை இலங்கைச் சூழலிலான இணக்கம் வேண்டுகிறது என்பது ஒருவேளை ஒரு விளக்கமாகலாம். இனத்துவத் திட்டங்கள், தம் இயல் பிலேயே, பரஸ்பரம் விலக்கி நிற்பனவாயும் “நாமும் அவர்களும்” என்ற கவர்பாட்டின் மீது கட்டப்பட்டும் உள்ளன.

இனத்துவமும் சனநாயகமும் நமது சமூகத்துக்கு நவீனத்துவம் கொண்டுவந்த இரு அதிமுக்கிய அரசியற் கற்பனைகளாம். இனத்துவம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றுஞ் சில சமூகங்கள் ஒவ்வொன்றும் தன்னை ஒரு அரசியற் சமூகமாகவும் அரசியற் பொதுக் கூட்டாகவும் கருதுதற்கான சிந்தனைச் சட்டகத்தைத் தந்துள்ளது. சன நாயகம், உரிமையுடைய ஒரு தனிமனிதனாகவும் கண்ணியமாயும் சமத்துவமாயும் நடத்தப்பெறும் உரித்துடையவனாயும் ஒவ்வொரு குடிமகனும் அரசுடன் தன்னை உறவுபடுத்த இயலுமாக்கியுள்ளது. இவை எவ்வாறும் நவீனத்துவத்தின் அற்பச் சாதனைகளல்ல. இவ் விரண்டும் இலங்கையின் குடிமக்கள் யாவரதும் அரசியற் சுயத்தின் மூலங்கள். இனத்துவத்தின் மூலம் நமது குடிமக்கள் தம்மை முதற்கண் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் இத்தியாதி பண்பாட்டு-அரசியற் சமூகங்களைச் சார்ந்தோராகத் தம்மை விளங்கு கின்றனர். குடிமக்களின் இனத்துவ, அரசியல் அடையாளங்கள் கடந்த சமத்துவத்தை வசதிப்படுத்தும் சனநாயகம் உறுதியளிக்கப்படடிருந்தும் இனத்துவ அடையாளத்தையடுத்தே அதனிற் பெரிதான தேச-அரசு அடையாளம் — இலங்கையர்த் தன்மை — வருகிறது. வலிய பல காரணங்களாற்;, குழு அடையாளத்தின் இனத்துவக் கற்பிதம் தேச-அரசு என்ற அடையாளக் கற்பிதத்தை மேவியுள்ளது. சனநாயகத்தின் தனிமனித, எதிர்மறையான உரிமைகள் பற்றிய கதையாடல், குழுக் களின் இக்கட்டுக்களையோ சனத் திரள்களின் விமோசனம் பற்றிய பார்வைகளையோ ஒலிப்பித்தற்கான வெளிப்பாட்டு மொழியைத் தர வில்லை. இச் சூழலிலேயே சிங்கள, தமிழ் பின்னர் முஸ்லிம் இனத் துவத் தேசிய அடையாளங்கள் நவீன இலங்கையின் அதி வலிய அரசியல் இயக்காற்றலாக விருத்திபெற்றன. மூன்று தசாப்தங்களாக நடந்த நீடித்த உள்நாட்டுப் போரை முன்னே உந்தியது இனத்துவத் தேசியச் சித்தாந்தங்களேயன்றிச் சனநாயக இலட்சியங்களல்ல என நாம் உணரும் போது அது மேலும் அச்சமூட்டுகிறது. இனத்துவத்தின் வெற்றி நமது சனநாயகத்தின் தோல்வியாகியது. இச் செயற்பாங்கை மறுதலையாக்கி இனத்துவத்தினதும் இனத்துவத் தேசியவாதங்களி னதும் பிரிவுசார்ந்த, குறுகிய நோக்குடைய, விலக்கி நிற்கும் உறுதிமொழியை மழுங்கடிக்கும் ஆற்றலுடையதொரு அரசியற் சக்தி யாகச் சனநாயகத்தை மீளக் கொணர்வதே உள் நாட்டுப் போருக்குப் பிந்திய இலங்கையின் சவால்.

இனத்துவத்தைக் கையாள்வதில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. ஏனெனில், மதத்தைப் போன்று, இனத்துவமும் வேதனை, அச்சங்கள், மீட்சி என்பவற்றன் நனவு அனுபவவியலுக்கு எதிர்வினையாற்றும். மதச் சார்பின்மையால் மதத்தைக் கையாள முடியாது. ஏனெனில், மதத்தின் இருப்பின் நனவு அனுபவவியல் நியாயப்படுத்தலையே அது மறுக்கி றது. தனிமனித மனச்சோர்வும் ஏமாற்றமுங் கொண்ட உலகில், வெறும் மாயையேயன்றி வேறல்ல என ஒரு மதச் சார்பிலி காணும் தேற்றுதலையும் விருப்ப நிறைவேற்றத்தையும் பற்றிய ஒரு கற்பனை யை மதம் தருகிறது. ஏவ்வாறாயினும் மதம், மதச் சார்பிலியின் பகுத் தறிவு வாதத்தை மறுக்கிறது. ஏனெனின், இவ்வுலகுக்குரிய கையறு நிலையை விளங்கவும் கையாளவும் இருப்பதாக மதச் சார்பின்மை ஏற்கவுந் தவறும் குறிப்பானதொரு வழியை மதம் தருகிறது. இனத்து வத்துக்கும் சனநாயகத்துக்கும் இடையிலான உறவுங் கொஞ்சம் அதையொத்ததே. தனிமனித சுதந்திரமும் சட்டத்தின் ஆட்சியும் சமத்துவமும் என்ற வடிவில் சர்வவியாபகமானவொரு அரசியல் விடுதலைக்கான மேலான உறுதிமொழியிருக்கக் குறுகிய இனத்துவக் கற்பனை இத்தனை கவர்ச்சியுடையதானது எப்படி என நியாயப்படுத் துவது நல்லவொரு தாரள சனநாயகவாதிக்குக் கடினமாயிருக்கலாம். அரசியற் தத்துவவியலில், இவ்விரு நோக்குக்களும் சமூகநோக்கிற்கும் தனிமனிதவாதத்திற்கும் இடையிலும் பண்பாட்டுச் சார்பியலுக்கும் பொதுமை நோக்கிற்கும் இடையிலுமான விவாதங்களாக உருவமைக் கப்பட்டுள்ளன. அரசியல் உலகைப் பகைமையான இருமங்களின் அடிப்படையில் நோக்குவதான பொறிக்குட் சிக்காமல், இனத்துவத்துக் கும் சனநாயகத்துக்குமடையே ஏதோ வகையான உரையாடல் ஏன் அவசியமானதும் இயலுமானதும் என இன்னமும் ஒருவர் உணரலாம்.

இத்தகையதொரு உரையாடலின் சாத்தியப்பாட்டை விசாரிக்குமுன், இனத்துவமோ இனத்துவத் தேசியவாதமோ பெருமளவும் ஊக்குவிக்கும் கருத்துப் பரிமாறல்களின் வரையறைகளையிட்டு விழிப்போடிருப்பது அவசியம். சிங்கள, தமிழ்த் தேசியவாதங்கள் தொடர்பாக இலங்கை யின் சொந்த அனுபவத்தை எடுப்பின், ஆதிக்கத்திலுள்ள இவ்விரு குழு அரசியற் கற்பனைகளும் உண்மையிற் தம்மிடையோ தாம் பெயராண்மைப்படுத்தும் சமூகங்களிடையோ ஆக்கமான அரசியல் உரையாடல் எதையும் வசதிப்படுத்தவில்லை என நாம் காணலாம்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் தலைமை யிலான இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகட்கும் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் தேசியக் கூட்டமைப்பினராகிய தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகட்குமிடையிலான அமைதிப் பேச்சுக்களின் போது, உரையாடலின் இயலாமை எனும் பிரச்சனை, மனதிற்பதியுமாறு நிகழ்ந்தது. சிங்கள, தமிழச் சமூகங்களிடையே, பெரும்பான்மைச் சிறு பான்மைச் சமூகங்கள் இலங்கை எனும் தேச அரசினுள் சமமானோ ராக வாழ்வதற்கு ஒரு பொது அரசியற் களத்தைக் கண்டறியும் நோக்கிலான பேச்சுவார்த்தைகள் 1950களின் நடுப் பகுதி தொட்டு 2012 வரை முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய பேச்சுவார்த்தைகள் யாவுமே ஒரு பொதுக் களத்தையன்றி வேறுபாடுகளையும் இணங்க வியலாதவற்றையும் பகைமைகளையுமே கண்டறிந்தன.

சுதந்திரத்தின் பின்பான இலங்கை அரசியல் வரலாற்றை நோக்கு தல் மூலம் ஒருவர் இத் தோல்வியை விளக்கக்கூடிய பல காரணங்க ளைக் காணலாம். இலங்கையின் இன மோதலின் எழுச்சியைப் பற்றிய புலமைசார் எழுத்துக்களிற் பயனள்ள விளக்கங்கள் மலிந்துள்ளன. இலங்கையில் ஆதிக்க நிலையிலுள்ள இரு இனத்துவத் தேசியங்க ளும் ஒரே மொழியைப் பேசியபோதிலும் ஒன்றையொன்று விளங்க உள்ளார்ந்த இயலாமையுடனுள்ளன என்பது அவ் எழுத்துக்களிற் துலாம்பரமான ஒரு கருப்பொருளாகும். நவீன இனத்துவத் தேசிய வாதத்தின் மூல முரணுரைகளில் இதுவொன்று. ஒரு அரசியல் இயல் நிகழ்வு என்ற வகையில் தேச அரசு ஒன்றினுள் உள்ள இனத்துவத் தேசியவாதங்கள் அமைப்புவழியிலும் புறமெய்ம்மையிலும் பல உடன் பாடுகளைக் கொண்டன. அவை ஒவ்வொரு சமூகத்தினதும் அச்சங் களையும் ஏக்கங்களையும் நம்பிக்கைகளையும் அபிலாட்சைகளையும் வெளிப்படுத்துகின்றன. நிகழ் காலத்தை விளக்கவும் எதிர் காலத்தை ஏறத்தாழக் கடந்த காலம் போற் திட்டமிடவும் அவை கடந்த காலத் தை அழைக்கின்றன. அவை வீரர்களையும் வில்லன்களையும் உண் டாக்கி வரலாற்று நினைவுகளை உருவாக்கி வரவழைத்து வரலாற்று நிச்சயங்களை வேண்டிநிற்கும் விதம் வியத்தகு ஒற்றுமையுடையது. எவ்வாறாயினும் தேசியவாதத்தின் மொழியில் ஆக்கமாக உரையாடு வது தேச அரசொன்றுள் உள்ள எவ்விரு இனத்துவத் தேசியவாதங் கட்கும் இயலாது. அதன் காரணம் தேசியவாதத்தின் தனியியல்பினுள் உள்ளது. இரு தேசியவாதங்கள் ஆக்கமான உரையாடலொன்றுட் புக அவற்றுக்குத் தேசியவாதத்திற்குப் புறம்பான ஒரு மொழி தேவை. இங்கு தான் நவீனத்துவத்தின் மற்றொரு பேறான சனநாயகம் ஒருமைப்பாட்டுக்கும் உடனிருப்புக்குமான ஒரு கட்டமைப்பைக் காண நமக்கும் இனத்துவத் தேசியவாதங்கட்கும் துணைவருகிறது.

தேசத்தைக் கட்டியெழுப்பலும் அரசியல் ஒருங்கிணைதலும்


போர் முடிந்த பின்பு தேசத்தைக் கட்டியெழுப்பலினதும் அரசியல் ஒருங்கிணைதலினதும் முக்கியம், புதியதொரு சூழலில், ஆனால், அநேகமாக மேலும் உக்கிரமாகப், பழைய சவால்களுடன், நாட்டின் அரசியற் செய்நிரலுக்கு மீண்டது. நமது அரசியல் மேநிலையோரும் ஊடகங்களும் வெளிப்படையாகப் பேசாத போதும், இரு கேள்விகள் விவாதத்தின் மையத்திலுள்ளன. அவையாவன: (அ) மூன்று தசாப்த உள்நாட்டுப் போரின் பின் இலங்கையில் நாம் எத்தகைய தேசத்தைக் கட்டியெழுப்ப விழைகிறோம்? (ஆ) இலங்கையில் நாம் எத்தகைய அரசைக் கட்டியெழுப்ப விழைகிறோம்?
விளங்கத்தக்கவாறு, இவ் வினாக்கட்கான விடைகள் பல பார்வைக் கோணங்களினின்று அமையலாம். அரசியல் விவாதத்தில், இரு பெருங் கண்ணோட்டங்கள் உள்ளன. ஒன்று ஐ.ம.சு.கூ. அரசாங்கம் பகிர்வது. மற்றது த.தே.கூ. முன்வைப்பது. அவற்றின் முக்கிய ஊகங்களும் ஆய்வுகளும் முடிவுகளும் வேறுபடுவன.
இலங்கையிற் போருக்குப் பிந்திய தேசிய ஒருமைப்பாட்டினதும் தேசத்தைக் கட்டியெழுப்பலினதும் திறவுகோலாக வடக்கினதும் கிழக்கி னதும் பொருளாதார விருத்தியை அரசாங்கம் கருதுவதாகத் தெரி கிறது. இந்த நிலைப்பாடு, அரசியல் மனக்குறைகளினால் உருவாகி அதன் பயனாக அரசியல்-அமைப்பு மாற்றங்களை வேண்டிய ஒரு அர சியற் பிரச்சனையாக இனத்துவ மோதலைக் கொள்வதற்கு மேலாக அதை ஒரு பயங்கரவாதப் பிரச்சனையாகவும் அரசின் இறைமைக்கு ஒரு பாதுகாப்பச் சவாலாகவும் கொள்ளும் ஊகத்தின் அடிப் படையி லானது. எனவே, எந்த எதிர்கால எழுச்சி மிரட்டலையும் நசுக்குமாறு தேசியப் பாதுகாப்பையும் தற்காப்பு ஆற்றலையையும் வலுப்படுத் துவதே தேவை என்பதைச் சுட்டுவதாக ஐ.ம.சு.கூ. அரசாங்கத்தின் சிந்தனை தெரிகிறது. போருக்குப் பிந்திய அரசியல் பொருளாதார மாற்றம் பற்றிய அரசாங்க நோக்காயமையும் தேசியப் பாதுகாப்பின தும் வலிய அரசினதும் பொருளாதார ஒருங்கிணைவினதும் இச் சேர்க் கை, சில தென்கிழக்காசிய நாடுகள், குறிப்பாக மலேசியா, சில ஆண்டுகள் முன்னர் மேற்கொண்ட அபிவிருத்தி அரசுப் பரிசோத னைக்கு ஒப்பானது.
மாறாகத், த.தே.கூ. இனத்துவ மோதலின் அரசியல் அடிப்படைக் காரணங்கட்கு முதன்மை அளிக்கிறது. அதன் அணுகுமுறையில், தமி ழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி முன்னேற்றமான அதிகாரப் பரவ லாக்கத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கான தமிழ்ச் சமூகத் தின் அரசியல் அபிலாட்சைகளை அழித்துவிடவில்லை. இந்தப் பகுப் பாய்வில், இனத்துவ மோதல் அரசியற் தீர்வை வேண்டும் ஒரு அரசி யற் பிரச்சனை. அரசியற் தீர்வு அரசின் மறுசீரமைப்பை வேண்டுகிறது.

இரண்டு அணுகுமுறைகளும் இங்கு குறிப்பான வேற்றுமைகளையும் ஒப்புமைகளையும் உடையன. வேற்றுமைகள் ஒவ்வொரு அணுகு முறையும் சார்ந்துள்ள இனத்துவ-அரசியல் நிலைப்பாடுகளினின்று எழு கின்றன. அரசாங்கத்தின் அணுகுமுறை தெளிவாகவே இலங்கையின் மோதலையும் அது வேண்டம் தீர்வையும் சிங்களத் தேசியவாத இனத்துவப் பெரும்பான்மைத்துவ சட்டகமொன்றுட் பொருத்துவதாக உள்ளது. சிறுபான்மைப் பிரிவினைவாதக் கிளர்ச்சியொன்றால் முன்னர் மிரட்டுண்ட அரசின் இறைமையின் மீட்பாக அது போரின் விளைவைக் காண்கிறது. அரசின் இறைமைக்கும் அரசின் ஒருங்கமைவுக்கும் வரக் கூடிய ஒரு மிரட்டலாக அது அதிகாரப் பரவலாக்கத்தைக் காண்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு அரசி யல் அமைப்புக்கு — இவ்விடத்துத் த.தே.கூ.வுக்கு — அதிகாரத்தைப் பரவலாக்குவதை அரசாங்கத் தலைவர்கள் ஏற்கவியலாததாயும் மதி யூகமற்றதாயும் ஆபத்தானதாயுங் கூடக் காண்கின்றனர். போர் வெற்றி யின் அரசியல் ஆதாயங்களை இல்லாதாக்கும் நடவடிக்கைகளை எடுப்பானேன்? இச் சொல்லாட்சி மிகு கேள்வி ஒரு வகையில் ‘வென்ற வனின்’ அமைதி என அழைக்கக்கூடியதன் இரண்டக நிலையைச் சுருங்கக் கூறுகிறது. தமிழருடனான எந்த அரசியல் உடன்பாட்டின் அடிப்படைகளதும் நிபந்தனைகளதும் மீது நிராகரிப்பு அதிகாரத்தைப் போர் வெற்றி அரசாங்கத்துக்கு வழங்கியமை இந்த இரண்டக நிலை யை மேலும் உச்சப்படுத்தியது. இவ்வாறு அரசாங்கம் வேண்டி வர வழைத்துள்ள இப் போருக்குப் பின்பான வெற்றிக்களிப்பு வெறுமனே ஒரு மனநிலை மட்டுமல்ல. அது குறிப்பானதொரு அரசியற் தர்க்கவிய லின் — இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிந்த விதத்தின் விளை வான புதியதொரு அரசியற் சமநிலையினது — வெளிப்பாடுமாகும்.

மற்றது, அரசாங்கத்திடமிருந்து சாதகமான எதிர்வினையின்றித் த.தே.கூ. தொடர்ந்து பேசிவரும் ‘முறியடிக்கப்பட்டவரின் அமைதி’. இம் ‘முறியடிக்கப்பட்டவரின் அமைதி’ தமிழருக்கு அதிகாரப் பரவலாக்கத் தையும் சமத்துவத்தையும் கண்ணியத்தையும் கோருகிறது. இந் நோக்கில், அரசியல் உரிமைகளும் அரசு அதிகாரத்தைப் பகிரும் உரி மையும் துரிதமான பொருளாதார விருத்தியின் பருப்பொருண்மையான நலன்களை மேவுகின்றன. அது அதிகாரப் பரவலாக்கத்தைப் போருக் குப்-பிந்திய அரசு-நிர்மாணத்திற்கும் தேசிய ஒன்றிணைவுக்கும் அத்தி யாவசிய முன்நிபந்தனையாகக் காண்கிறது. எவ்வாறாயினும் தனது அரசியற் கோரிக்கைகளில் எதையும் நனவாக்குவதற்கான பேரம்பேசும் வலிமை த.தே.கூ.விடம் இல்லை. முறியடிக்கப்பட்ட ஒரு சிறுபான்மை யின் அரசியற் பிரதிநிதியாக இருக்கும் அதன் பலவீனத்திலிருந்தே அதன் வலிமை வருகிறது. எனினும் இந்த ஆன்மீக வலிமையானது உள்நாட்டுப் போருக்குப் பிந்திய இலங்கையில் அரசியல் வடிவெடுக் கும் வகையிற்; பருப்பொருண்மையான ஒரு பெறுமதியுமற்றது.

போட்டியிடும் இரு அணுகுமுறைகளும் பகிரும் ஒப்புமையில் நிசத் தன்மையை விட முரண்நகை கூடுதலானது. அது ஒவ்வொன்றினதும் அறிவாதார மூலத்தின் இனத்துவ அத்திவாரங்களினின்று எழுவது. இரண்டுமே இனத்துவத் தேசியவாதச் செய்திட்டங்கள்: ஒன்று பெரும்பான்மைக்குரியது, மற்றது சிறுபான்மைக்குரியது. ஒவ்வொன்றின தும் மொழியின் முக்கிய சொற்களின் அர்த்தங்களை இரண்டும் பகிரா மையால் ஓவ்வொன்றும் தன்னை வெளிப்படுத்தும் அரசியல் மொழிக்கு மற்றது ஆக்கமாக எதிர்வினையாற்றுவதில்லை. உதாரணமாக, அதிகா ரப் பரவலாக்கம் என்பது த.தே.கூ.வுக்கு அரசியல் ஒன்றிணைவுக்கான குறைந்தபட்ச முன்நிபந்தனை. ஆனால் ஐ.ம.சு.கூ.வுக்கு அது அரசின் குலைவுக்கான படிக்கல். சுயநிர்ணயம் என்பது த.தே.கூ.வுக்குத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகட்கான உரிமைகோரலைக் கட்டமைக் கும் எண்ணக்கரு. ஐ.ம.சு.கூ.வுக்குச் சுயநிர்ணயம் என்பது பிரிவினைக் கான கோரிக்கை. த.தே.கூ.வுக்கு அரசியல் உரிமைகள் பொருளாதார, உட்கட்டமைப்பு விருத்திகட்கு முன் வர வேண்டும். அரசாங்கத்துக்குப் பொருளாதார விருத்தியே தமிழ் மக்களுக்கு அரசு வழங்கக்கூடிய அதிசிறந்த பரிசு.

இணக்கவியலா இணக்கப்பாடு?


உரையாடலின் இயலாமை — ஐ.ம.சு.கூ. அரசாங்கத்துக்கும் த.தே.கூ. வுக்குமிடையிலான பேச்சுக்கள் வீழ்ந்துள்ள இக்கட்டான நிலைமையை இந்தப் பதம் விளக்கும். இலங்கைக்கு வெளியேயுள்ள இலங்கையின் அவதானிகள் மிகவும் வியப்புறுமாறு அரசாங்கத்துக்கும் த.தே.கூ.வுக்கு மிடையே உரையாடலின் இயலாமை தொடர்வதை விளங்குதற்கு இரு தரப்பினருக்குமிடையிலான பேச்சுக்கள் முடங்க ஏதுவான அரசியல், தத்துவார்த்த, பண்பாட்டுச் சூழல்களை விசாரிப்பது தகும். இவ் விட யத்திலும், பல விளக்கங்கள் இருக்கலாம். எவ்வாறாயினும் 2009 மே மாதத்திற்குப் பின்பு இலங்கையில் அரசியல் விவாதம் விருத்தியடைந் துள்ள விதத்தின் கவலைக்குரிய ஒரு பரிமாணம் ஏதெனின், மனப் போக்குக்கள், அல்லது உலக நோக்குக்கள், வென்றவர்-தோற்றவர் என்ற அடிப்படையில் எதிரெதிர் முனைப்படைந்துள்ளமையாகும்.
மேற்கூறிய உலக நோக்குக்களின் ஒப்பிடவியலாமை எவ்வாறு இலங்கையிற் போருக்குப் பிந்திய அரசியல் மீட்பிற்குப் பெருந் தடை யாகியுள்ளது என்பதை இணக்கம் பற்றி இலங்கை அரசாங்கத்துக்கும் மேற்குலக அரசாங்கங்கட்குமிடையே தொடரும் விவாதம் விளக்கமாக எடுத்துக்காட்டுகிறது. மேற்குலக அரசாங்கங்களும் ஐ.நா.வும் இலங் கையின் போருக்குப் பிந்திய இணக்கம் பின்வரும் இரண்டு உறுப்புக் களின் அடிப்படையில் அமைய வேண்டுமென வலியுறுத்துகின்றன: (அ) இனத்துவ மோதலுக்கு அரசியற் தீர்வு; (ஆ) போரின் இறுதிக் கட்டங்களில் நிகழ்ந்திருக்கக்கூடிய போர்க் குற்றங்களையும் அவை தொடர்பான மீறல்களையும் விசாரித்தல். இந்த அணுகுமுறையை வலி யுறுத்துவோரின் நோக்கில் போருக்குப் பிந்திய ‘குணப்படுத்தலுக்கு’ இரண்டும் அவசியம். தொடக்கத்தில் இந்த அணுகுமுறை பற்றி அசவு கரிகமாயிருந்த ஐ.ம.சு.கூ. அரசாங்கம், பிரச்சனை போருக்குப்-பிந்திய இலங்கையின் அரசியற் போக்கை வடிவமைக்கும் மேற்குலக முயற்சி களின் ஒரு பகுதியாகிய பின்பு, அதற்குப் பகையானதாயிற்று.

போருக்குப்-பிந்திய இணக்கம் பற்றிய மேற்குலகக் கருத்தமைவுக் குக், குறிப்பாகத் தென்னாபிரிக்காவின் “உண்மையும் இணக்கமும் ஆணைக்குழுவின்” அனுபவத்தில் வெளிப்பட்டவறான, தாராளவாத, கிறிஸ்துவ-மனிதாபிமான வேர்கள் உள்ளன. தென் ஆபிரிக்காவிலும் குவாட்டமாலாவிலும் ஊக்குவிப்புடன் நடந்த பேச்சு வார்த்தைகள் வழி யிலான அமைதி உடன்படிக்கை மூலம் மோதல் முடிவுபெற்றமையால் இணக்கம் இயலுமானது. அவை வென்றோர் தோற்றோர்; எனுஞ் சொற்களின் நெறிசார்ந்த கருத்தில் வென்றோரோ தோற்றோரோ இல் லாத நிலைமைகள். அமைதி உடன்படிக்கை மூலம் மோதலும் வன் முறையும் முடிவுக்கு வந்தமை அங்கு முழுத் தேசத்தினதும் அறஞ்சார் வெற்றியெனக் காணப்பட்டது. ஐ.ம.சு.கூ. அரசாங்கத்தின் நோக்கில் இலங்கை நிலவரம் முற்றிலும் வேறுபட்டது. அங்கு, இணக்கம், பல் லாண்டுக்கால வெறுப்பிற்கும் வன்முறைக்கம் போருக்கும் பிறகு மனி தாபிமான விழுமியங்கட்கு மீளலின் கொண்டாட்டமாகக் காணப்பட்டது. இங்கு போருக்குப்-பிந்திய இணக்கம் என்பது வேறொரு அறச் சிக்க னத்தையும் குறித்தது. அது கடந்ததை மறந்து முன்செல்வதைப் பற்றி யதன்றிக் கூட்டு மருத்துவத்துக்காகவோ பழி தீர்ப்புக்காகவோ கடந்த காலத்துக்கு மீள்வதைப் பற்றியதல்ல.
அதனால் இலங்கையில் இணக்கப் பிரச்சனை அதன் நெறிசார், விழுமியச் சட்டகத்தினின்று விலகியுள்ளது. அது ஒருபுறம் அரசாங்கத் துக்கும் த.தே.கூ.வுக்குமிடையிலும் இன்னொருபுறம் அரசாங்கத்துக்கும் உலக வல்வரசுகட்குமிடையிலுமான முடிவிலாப் பகைகளுட் சிக்குண் டுள்ளது. அறஞ்சார் நடைமுறையென்ற வகையில் இணக்கமென்பது சுயவிருப்பாலான முயற்சி. அதைத் தயக்கத்துடன் அல்லது வெளியார் அழுத்தங்களின் விளைவாக மேற்கொண்டால் அது இணக்கமாகாது. அதைக் குறிக்க வேறொரு சொல் தேவை. இதுவே போருக்குப் பிந்திய இனத்துவ இணக்கத்தில் இலங்கையின் இக்கட்டு.

இனத்துவத்தை என்ன செய்வது?


இனத்துவத் தேசியவாத அரசியல் இலங்கையில் இன்னுங் கன காலத் துக்கு இருக்கப் போவதாகவே தெரிகிறது. இக் கட்டுரையில் இதுவரை யான கருத்தாடல் சுட்டுமாறு, இனத்துவ அரசியல் குழுக்களின் மனக் குறைகளையும் அபிலாட்சைகளையம் கோடிட்டுக் காட்ட உதவியுள்ள போதும், இலங்கை மக்களுக்கு அதிக நன்மை செய்யவில்லை. இனத் துவ அடிப்படையிலான அடையாள அரசியல் நமது குடிமக்களுக்கு அரசியற் கற்பனைப் பாங்குகளையும் அரசியற் கருத்து வெளிப்பாட்டு மொழியொன்றையும் பிற குடிமக்களையும் அவர்களுடைய குழுக்களை யும் நோக்கி அவர்கள் யாரெனவும் அவர்கள் என்ன செய்கின்றனரென மதிப்பிடவும் பூதக் கண்ணாடிகளையும் தந்துள்ளது. இனத்துவத் தேசிய வாத அரசியல் இலங்கையின் அனைத்துக் குடிகளையும் கூர்மையாக அரசியற்படுத்தி அவர்களுடைய அரசியல் உணர்வை முன்பிருந்திராத மட்டங்கட்கு உயர்த்தியுள்ளது. அனைத்துச் சமூகங்களின் குடிகளும் — சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், தோட்டப் பகுதித் தமிழர், பறங் கியர் மற்றும் மலையாளி, தெலுங்கு, கொழும்புச் செட்டி, வேடர் தொல்குடிகள் ஆதிய சிறு இனத்துவச் சமூகங்களும் — அரசியல் ரீதியாகத் தாம் யார் எனவும் சமூகத்தின் விரிவான விவகாரங்களிற் தமது இடம் என்னவெனவும் கூர்மையாக உணர்வர். தங்கள் நண்பர் கள் யார், எதிரிகள் யார் எனவும் மிரட்டல்களின் தோற்றுவாய்களும் ஒருமைப்பாட்டின் தோற்றுவாய்களும் எவை எனவும் அவர்கள் நன்கு உணர்வர். அனுபவ அடிப்படையிற் பல கருத்துக் கணிப்புக்கள் உணர்த்தியுள்ளவாறு இச் சமூகங்கள் அனைத்தினதும் குடிகள் தமது மனக்குறைகளையும் உரிமைகளையும் தாம் வாழ விரும்பும் அரச மைப்பைப் பற்றியுங் கூட உறுதியான அரசியற் கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக நல்லனவுமல்ல, ஒட்டுமொத்தமாகத் தீயனவுமல்ல. இப்போதுள்ள மெய்யான பணி யாதெனின், சனநாயக, பன்முகப் பண்பான, அமைதியான இலங்கை யெனும் பகிரப்படும் பொது இலக்கை நோக்கி இனத்துவ உணர்வுள்ள சமூகங்களின் அரசியல் ஆற்றல்களை நெறிப்படுத்துவதாகும்

இலங்கை எனும் அரசியல் இணைவின் உறுப்பினர்களாக இச் சமூகங் களை ஒன்றிணைத்தவைக்கக் கூடியது எது? பொருளாதார வளம் அல்லது வளம் பற்றிய எதிர்பார்ப்பே வேறுபட்ட சமூகங்களைப் பிணைக்கும் இழை என இன்றைய இலங்கை அரசாங்கம் கருதுகிறது. அதன் தேர்தல் சுலோகமான ‘மங்களமான எதிர்காலம்’ இச் சிந்தனை யைத் தொகுக்கிறது. மங்களமான எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு சில இனத்துவச் சமூகங்களைக் கவரலாம். ஏனெனில், மூன்று தசாப்தங் களாக நடந்த போரும் வன்முறையும் அவர்கட்குப் பொருளாதார நலத்தின் நன்மைகளை மறுத்துள்ளது. எவ்வாறாயினும் தமிழ் மக்கள் வேறுவிதமாகச் சிந்திப்பதாகத் தெரிகிறது. ஆணோ பெண்ணோ, அவர் கள் சோற்றுக்காக வாழ்வோரல்ல. அவர்கட்குக் கூட்டான கண்ணிய முந் தேவை. ‘மங்களமான எதிர்காலம்’ பற்றி அவர்களுடைய கருத் தாக்கம் முறியடிக்கப்பட்டவரினது, தோற்றவரினது, பலியானவரினது பார்வையினின்று எழுவது. அக் கருத்தாக்கத்தில் கண்ணியமும் சமத் துவமும் நிதியும் முக்கியமான உணர்ச்சிவயமான எதிர்பார்ப்புக்களைத் கொண்டன. குணப்படுத்தற் சைகை ஒன்றன்மூலம் சிங்களத் தலைமை களால் தமிழருக்கு எதிர்வினையாற்ற இயலுமா? போருக்குப் பிந்திய அரசியல் ஐக்கியத்துக்கும் தேசத்தின் கட்டியெழுப்பலுக்கும் அரசின் கட்டியெழுப்பலுக்கும் அமைதிக்கும் சனநாயகத்துக்குமான வாய்ப்பை மதிப்பிடுவதற்கு இக் கேள்வி மையமானது. ஏனெனில் இலங்கைத் தமி ழர்கள் வீதிகளாலும் நெடுஞ்சாலைகளாலும் பாலங்களாலும் துறை முகங்களாலும் மட்டுமே வாழ்வோரல்ல.

அரசாங்கத்தின் தர்க்கவியலை அதன் கண்ணோட்டத்தினின்று விளங்க முயன்றால், ‘தமிழ்ப் பிரச்சனை’ அது எனக் குறிப்பதன் இனத்துவ அடையாளப் பரிமாணத்தின் அழுத்தத்தைக் குறைக்க அர சாங்கம் விரும்புகிறது என்பது முற்றிலும் இயலுமானதே. அவ்வாறே அரசாங்கத்தின் ஒட்டுமொத்தக் கொள்கையைப் பெருமளவுக்குத் தீர்மா னிக்கும் சிங்களத் தேசியவாத வேலைத்திட்டத்தின் அழுத்தத்தையும் குறைக்கும் முயற்சியுடன் அது சமாந்தரமாக நிகழின், அது கேடான தல்ல. அரசாங்கம் செம்மையாகச் செய்யவேண்டியது ஏதெனின் அனைத்து இனத்துவ அடையாளங்களையும் அங்கீகரித்து அணைக் கும் அதே வேளை எதற்கும் சிறப்புரிமை வழங்காததாக அனைத்து இனத்துவச் சமூகங்கட்குமான ஒரு விரிவான அரசியல் அடையாளத் தை நிர்மாணிப்பதாகும். அவ்வாறு அமையக்கூடிய அரசு, அரசிற் சமமான பங்கீடுபாடுடைய சமமானோராயுள்ள பல அரசியற் சமூகங் களைக் கொண்ட தேசியப்-பின்பான ஒரு குழுவாக அமையலாம்.

தேச-அரசுக்குள்ளும் அப்பாலுமான ஒரு புதிய அரசியற் கூட்டைக் கட்டுவதைக் குறிப்பானதொரு பொருளில் ஓர தேசியப்-பின்பான செய் திட்டமாக நோக்கலாம். ‘தேசியப்-பின்பான’ என்பது, ஜேர்மானிய அரசி யற் சிந்தனையாளரான யுர்கென் ஹபெர்மாஸ் ‘அரசியலமைப்புக்குட் பட்ட தேசபக்தி’ எனும் தனது கருத்தமைவுக்கு ஆதரவாக முன் வைத்த சூத்திரமாகும். உலகமயமாதலினதும் குடிபெயர் சனங்களின் வரவினதும் பின்னணியில் குடிகளிடையிலான பொது அடையாளம் பழைய ஒற்றைப் பண்பாட்டுத் தேசிய அடையாளமாக இருக்கவியலா நிலையிற், ‘தேசியப்-பின்பான’ ஐரோப்பாவுக்கான ஒரு வாதத்தை ஹபெர்மாஸ் பேசிவந்துள்ளார். பன்மைப் பண்பாடு, பண்பாட்டுக்கு அப்பாலானவாறு அரசிற்குரியோராயிருக்கும் ஒரு உணர்வுநிலையை வேண்டுகிறது. ஹபெர்மாஸின் ‘அரசியலமைப்புக்குட்பட்ட தேசபக்தி’ எனும் ஆலோசனை, அரசியற் பற்றுதல் தேசியப் பண்பாட்டையன்றித் தாராள ஜனநாயக அரசியலமைப்பின் நியமங்களையும் விழுமியங் களையும் மையப்படுத்தி அமையவேண்டும் என்ற கருத்தின் வழியி லானது. அவை மதச்சார்பற்ற விழுமியங்களுமாம். அவை பண்பாட்டுத் தனித்தன்மைகளைக் கடந்தவை. அரசிடம் குடிசார் விசுவாசத்துக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை, உரித்தாயிருக்கும் அரசியற் பொருளில், அவை அனைவர்க்கும் வழங்குகின்றன.

பண்பாட்டு உரித்தாதலின் இடத்தைத் தனியே அரசியல் உரித்தா தல் நிரப்பும் நிலையை இலங்கை எட்டியுள்ளதா? தெளிவாக, இல்லை. இலங்கையின் கதை, தேச-அரசை உள்நாட்டுச் சண்டைகள் மூலம் வலியுறுத்தலும் மீள-உறுதிப்படுத்தலுமாகிறது. எவ்வாறாயினும், அது வென்றவரும் வெல்லப்பட்டவரும் சமமாகப் பகிருமாறு ‘தேசிய உரித்தாதற்’ கருத்தமைவை விசாலிக்க வேண்டுகிற ஒரு கதையு மாகும். இங்கு தான், ‘பண்பாட்டுத் தேசமாய்’ அன்றி ‘அரசியற்’ தேச மாய் அமையும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் மற்றும் பிற சிறிய சிறுபான்மையினர் உட்பட்ட அனைவருக்கும் ஆழ மான முறையில் உரித்தாயிருக்கும் அரசியல் உணர்வை ஏதோ வகை யான தேசியப்-பின்பான குடியுரிமையாற் தர இயலுகிறது. அத்தகைய உரித்தாயிருக்கும் அரசியல் உணர்வையும் அரசியல் ஒருங்குணர்வை யும் அரசியல் நியமங்களதும் விழுமியங்களதும் ஒரு தொகுதியாகச் சிறப்புற விளங்கலாம். நியமங்கள் என்பன அனைவரதும் பொது நன்மைக்காக ஒரு ஆட்சியமைப்பு சாதிக்கக்கூடிய இலட்சியங்களாம். அதே வேளை அவை, அரசினதும் அதன் நிறுவனங்களதும் ஊழியர்க ளதும் அதே வேளை குடிகளதும் அவர்கள் தெரிவுசெய்த பிரதிநிதிகள தும் நெறி முறைகளையும் எற்றற்குரிய பொறுப்புக்களையும் வழங்கு கின்றன. விழுமியங்கள், நியமங்களினின்று பெறப்படுகின்றன. அவை அரசினதும் அதன் நிறுவனங்களதும் ஊழியர்களதும் குடிகளதும் அவர் கள் தெரிவுசெய்த பிரதிநிதிகளதும் செயல்களை மதிப்பிடும் அளவு கோல்களாகவும் அமைகின்றன. நியமங்களும் விழுமியங்களும் பின்னிப்பிணைந்தவை. அரசியற் சமூகங்கள் ஒன்றுபடுத்தும் சித்தாந்தங் களை உருவாக்கவும் இலங்கை மிக அவதியாக வேண்டும் ஐக்கியத் துக்கான செய்திட்டமொன்றை அவை சேர்ந்து இயலுமாக்குகின்றன.

இந் நியமங்களும் விழுமியங்களும் யாவை? அமைதி, சனநாயகம், நீதி, நியாயம் ஆகிய அவை, உண்மையில், இலங்கைச் சமூகத்தில், மக்களின் அரசியல் உணர்வில், மனக்கசப்பான போதுகளில் மக்கள் அடிக்கடி அவாவும் அபிலாட்சைகளில் உள்ளன. அவை தாக்கப்படு கின்றமையையும் பின் வாங்குகின்றமையையும் சில போதுகளில் அழி யும் அபாயத்தை எதிர்நோக்குவதையும் மீறி, அவை யாவும் நமது அரசியற் சமூகத்தில் உள்ளன. எவ்வாறாயினும், அவை, இணைந்து சிந்திக்குமாறும் செயற்படுமாறும் மக்களை ஏவும் ஒரு வலிய அறிவா தாரமான சட்டகத்தை ஆக்குகின்றன. அரசும் அதன் நிறுவனங்களும் நடைமுறைகளும் பற்றிய ஒரு விமர்சனமாக மக்கள் அவற்றை அடிக் கடி நாடுகின்றனர். தம்மை ஆள்வோரதும் தமது பிரதிநிதிகளதும் நடத் தையை ஏற்கவோ மறுக்கவோ மக்கள் அவற்றைப் பாவிக்கின்றனர். சிங்களவரோ தமிழரோ முஸ்லிம்களோ வேறெவரோ ஆயினும், அனைத்துச் சமூகங்களதும் கூட்டு அரசியல் உணர்நிலையில் அவை ஆழப் பதிந்துள்ளன. உள்நாட்டுப் போருக்குப் பிந்திய நிலைமைகளின் கீழ் இன்றைய அரசியல் நிலைமாற்றக் கட்டத்தில் நியமங்களினதும் விழுமியங்களினதும் வழிகாட்டு சட்டகமாக மீண்டும் அவற்றைத் தேசத் தையும் அரசையும் கட்டியெழுப்பும் செய்திட்டத்தின் மையத்துக்கு மீட்பதே பெருமளவான அரசியல் ஆற்றலை வேண்டுகிற பணியாகும். ஏனெனில் இது அனைத்தச் சமூகங்களிடையிலும் ஒரு குறைந்தபட்ச விழுமியக் கருத்திசைவை வேண்டுகிற செய்திட்டமாவதுடன், அவர்க ளிடையே ஒரு புதிய அரசியல் உடன்படிக்கை போன்றதுமாகும்.

சில சிவில் சமூகக் குழுக்கள் ஏலவே அண்மையில் இலங்கைக் கான புதிய ‘சமூக ஒப்பந்தம்’ ஒன்றைக் கோரியுள்ளன. அனைத்துக் குடிகளையும் சமூகங்களையும், அரசையும் அதன் குடிகளையும், ஆள் வோரையும் ஆளப்படுவோரையும் ஒரு அரசியல் பொதுச் சட்டகத்துட னும் பிணைக்கும் ஒரு புதிய விழுமியச் சட்டகத்தை இலங்கை வேண்டுவதாக இப் புதிய சமூக ஒப்பந்தம் எனும் உருவகம் சுட்டு கிறது. ஒரு புதிய சமூக ஒப்பந்தம் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு புதிய அரசியற் கலந்தாய்வு நடைமுறையை வேண்டுகிறது. கலந்தாய்வு தொடர்பாடலுக்கும் உரையாடலுக்குமான ஒரு பொது மொழியை வேண்டுகிறது. இனத்துவத் தேசியச் சித்தாந்தங்களிடம் அத்தகைய வசதி இல்லை. ஏனெனில் அவை தனிமைகட்குக் குறுக் காக ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதில்லை. சமூகங்களிடை ஒருமைப் பாட்டிற்கான தொடர்பாடலுக்கும் உரையாடலுக்குமான பொது மொழி, இனத்துவத் தேசியவாதச் செய்திட்டங்கட்கு வெளியிலிருந்தே வர வேண்டும். அனைவர்க்கும் ஒருசேர அமைதி, சனநாயகம், சமூகங்க ளிடையே சமத்துவம், பகைமையற்ற நீதி, சமூக நீதியும் மனித நலமும், நியாயமும் என்பன பொதுவான அரசியல் உரையாடலுக்கும் தனிமைகள் கடந்த கற்பனைக்குமான ஒரு மெய்மையியலை — ஒரு உலக நோக்கை — அமைக்கலாம். இவை நமது பண்பாடுகள் அனைத்திலும் சமூக உணர்நிலை வடிவங்களனைத்திலும் ஆழ வேர் கொண்ட அரசியல் விழுமியங்களும் நெறிசார் சட்டகங்களுமாம்.

பின்வருங் கூற்றுடன் எனது அளிக்கையைப் முடிக்கிறேன்: சமூகங் களிடையிலான இணக்கத்திற்கான காலத்தை இலங்கை தாண்டி விட் டது. இணக்கச் செய்திட்டத்தின் மிகையான அரசியற்படுத்தல் புதிய ஐயங்களையும் கசப்பும் வஞ்சகம் பற்றிய புதிய எண்ணங்களையும் புதிதாக வெறுப்பின் அரசியலையுமே வளர்த்துள்ளன. இப்போது மக் கள் தேடக் கூடியதும் தேட வேண்டியதும் ‘சமூகங்களிடையிலான ஒருமைப்பாடே