செய்திகள்

போர்ட்சிட்டியின் எதிர்காலம் குறித்து சீனாவிற்கு உறுதிவழங்கினார் மைத்திரி

சீனாவி;ற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய போர்ட் சிட்டி திட்டத்தின்எதிர்காலம் குறித்து சீனாவிற்கு உறுதியளித்ததாக ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

சில பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர் குறிப்பிட்ட திட்டத்தை மீள ஆரம்பிப்தற்கான அனுமதியை வழங்குவோம் என இலங்கை ஜனாதிபதி சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தெரிவித்ததாக பிரதிவெளிவிவகார அமைச்சர் லியு சியான்சாவோ குறிப்பிட்டுள்ளார்.

போர்ட்சிட்டியை மையமாககொண்டு நடைபெற்றுள்ள விடயங்கள் தற்காலிகமானவை,பிரச்சினைகள் சீனாவின் தரப்பிலில்லை,சில விவகாரங்களுக்கு தீர்வை கண்ட பின்னர் அந்த திட்டத்தை தொடரவுள்ளோம் என சிறிசேனகுறிப்பிட்டுள்ளார்.எனினும் இரு ஜனாதிபதிகளும் கடன்களுக்கான வட்டிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது பற்றி ஆராயவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா இரு நாடுகள் மத்தியிலும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றது. இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சிகள்,ஆயுத தளபாடங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்தனர் என பிரதிவெளிவிவகார அமைச்சர் லியு சியான்சாவோ குறிப்பிட்டுள்ளார்.