செய்திகள்

போலி நாணயத்தாளுடன் தயிர் வாங்க முனைந்தவர் கைது

அட்டன் பகுதியில் தயிர் விற்பனை செய்துக்கொண்டிருந்த ஒருவரிடம் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி தயிர் கொள்வனவில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை, அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 அட்டன் டிக்கோயா பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் இரவு வேளையில் அட்டன் நகரில் லொறி ஒன்றில் தயிர் சட்டி விற்பனை செய்துக்கொண்டிருந்தவரிடம் தயிரை கொள்வனவு செய்ததன் பின், 5,000 ரூபாய் நாணயத்தாளை விற்பனையாளரிடம் கொடுத்துள்ளார்.

 அதன்பின் விற்பனையாளரும் மீதி பணத்தை வழங்கியபின் சந்தேகநபர் வழங்கிய தாள் போலியென்பதை கண்டறிந்த விற்பனையாளர் அவரை பிடிக்க முயற்சித்தபோது அவா் தப்பி ஓட முயற்சித்துள்ளார் அதன்போது நகரத்தில் இருந்த பொது மக்கள் அவரை பிடித்து அட்டன் பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைத்துள்ளனா்.

 இதனையடுத்து, அட்டன் பொலிஸார் சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின் கைது செய்துள்ளனா்.

சந்தேக நபா் அட்டன் நகரில் உள்ள நகை பட்டறையில் பணிப்புரிகின்றவா் என அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

சந்தேக நபரின் வீட்டையும், பணிப்புரியும் நகை பட்டறையையும் அட்டன் பொலிஸார் சோதனையிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

20150327_205635