செய்திகள்

போலி 5000 ரூபாவை வைப்பிலிட முயன்றவர் கைது!

நாகொடையில் உள்ள அரசாங்க வங்கியில் போலி 5,000 ரூபாவை வைப்பிலிடுவதற்கு முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக நாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மேசன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். தான் வேலைசெய்த வீட்டில் வழங்கிய பணத்தாளையே வைப்பிலிட சென்றதாக அந்த மேசன் விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்க வங்கியொன்றில் 5,000 ரூபாய் பெறுமதியான தாளை வைப்பிலிடுவதற்கு முயன்ற மேசன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.