செய்திகள்

மகிந்தவின் மகன் யோஷித்த டுபாய் சென்றார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகனான கடற்படையில் பணியாற்றிய லுத்தினன் யோஷித்த ராஜபக்ஷ, டுபாய்க்கு பயணமானார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே டுபாய்நோக்கி பயனமாகியுள்ளார்.

சாதாரண பயணிகள் பயன்படுத்தும் வழியூடாகவே அவர் நேற்றிரவு, எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே653 என்ற விமானத்திலேயே அவர் பயணம் செய்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.