செய்திகள்

மகிந்தவின் வெளிநாட்டுச் சொத்துக்களின் விபரங்களைத் தேட இந்திய உதவி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் வெளிநாட்டுச் சொத்துக்களின் விபரங்களை அறிய இந்திய நிதி புலனாய்வு பிரிவொன்றை கொழும்பில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 5 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை தேடும் வகையிலேயே இந்தியா இந்த உதவியை செய்யவிருக்கின்றது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையிலேயே இந்திய நிதி புலனாய்வு பிரிவை கொழும்பில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியத் தரப்பில் சாதகமான பதில் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.