செய்திகள்

மகிந்தவுக்கு தேர்தலில் இடமில்லை: ஜனாதிபதி மைத்திரி திட்டவட்டம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பு மனு வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியலில் இடம்பெறப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்ததாக, அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறினார்.

அதேநேரம், பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர்கள் இல்லையென்றும் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்கும் இடமில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக ராஜித்த குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுக்கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.