செய்திகள்

மகிந்தவை பிரதமராக்கும் கூட்டம் நாளைஇரத்தினபுரியில் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் நோக்குடன் நாளை இரத்தினபுரியில் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றிபெற்ற சுதந்திரம் ஆபத்தில், வெளிநாட்டு அழுத்தத்துக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் இக்கூட்டம் நாளை இரத்தினபுரி சீவலி விளையாட்டு மைதான அரங்கில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தை விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, உதய கமன்பில போன்ற மஹிந்த ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகிறது