செய்திகள்

மகிந்தவை மோடி சந்திக்கம் சாத்தியம்

இலங்கைக்கான இரு நாள் விஜயத்தை இன்று ஆரம்பிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பில் இச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சிகள் இடம்பெறுவதாக அரசியல் வட்டாரங்கள் ~இந்து| பத்திரிகைக்குக் கூறியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை கொழும்புக்கு ராஜபக்ச வருகை தருவாரென முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தைச் சேர்ந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

ஆனால் மோடியுடனான சந்திப்புத் தொடர்பான சாத்தியப்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த அந்த வட்டாரம் மறுத்துள்ளது. தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி அநேகமாக தங்காலையில் உள்ள தனது வாசஸ்தலத்திலேயே இருந்து வருகிறார்.

அண்மையில் டில்லியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதியை மோடி சந்திப்பாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு அது தொடர்பாக எதனையும் அறிந்திருக்கவில்லை என்று இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கூறியுள்ளார்.