செய்திகள்

மகிந்த அரசாங்கம் இந்தியாவின் பொறுமையை சோதித்தது

அதிகாரபகிர்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு புதுடில்லி காலஅவகாசத்தை வழங்கவேண்டும்,என இந்திய அமைதிப்படையின் தளபதிகளில் ஓருவரான அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.
இந்து நாளிதழிலுக்கு எழுதியுள்ள கட்டுரையொன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா அதிகாரபகிர்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் போதுமான காலஅவகாசத்தை வழங்கவேண்டும், பொறுப்புக்கூறும் விடயத்தில் ஐ.நாவுடன் இணைந்து சுயாதீனமான வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கைக்கு இந்தியா ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

சீனாவை பொறுத்தவரை அந்த நாட்டிற்கு வழங்கப்பட்ட அபிவிருத்திட்டங்களை புதிய அரசாங்கம் மறு ஆய்விற்குட்படுத்தவுள்ளது.கடந்த அரசாங்கத்தின் காலத்தை போன்று சீனா சுதந்திரமாக செயற்படமுடியாது.

புதுடில்லியை பொறுத்தவரை சீனாவின் சர்ச்சைக்குரிய நீர்மூழ்கியை இலங்கை தனது நாட்டிற்குள் அனுமதித்தவேளை அது தனது வரம்பை மீறிவிட்டதாக கருதியது.

முன்னைய அரசாங்கம் இந்தியாவின் பொறுமையை சோதித்துவந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.