செய்திகள்

‘மகிந்த இல்லாத தேசம்?’ பாணந்துறையில் சுவரொட்டிகள்

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக பாணந்துறை நகர்ப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘ஹெலவிரு பலமுழுவ’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டிகளில் சிங்களவர் மெளனம்! தேசிய கீதம் அழிப்பு! தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக அணிதிரள்வோம்! என்ற வாசகங்கள் இச்சுவரொட்டிகளில் காணப்படுகின்றன.

கடந்த சனிக்கிழமை வாதுவையில் இடம்பெற்ற ‘மகிந்த இல்லாத தேசம்?’ என்ற தலைப்பிலான “ஜாதிக பலய’ என்ற அமமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவரொட்டிகளும் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இதேவேளை கடந்த சனிக்கிழமை வாதுவை பெளத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.