செய்திகள்

மகிந்த ராஜபக்சவின் தோல்விக்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட றோ அதிகாரி வெளியேற்றப்பட்டார்?

இலங்கைக்கான இந்திய உளவுப்பிரிவின் தலைவர் மகிந்தராஜபக்ச அரசாங்கத்தினால் தேர்தல் பிரச்சார காலத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக அரசியல் மற்றும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அது மேலும் தெரிவித்துள்ளதாவது.
தேர்தல் காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை தோற்கடிப்பதற்காக எதிர்கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
எனினும் இந்த தகவல்களை இந்திய வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஓருவர் நிராகரித்துள்ளதுடன்,அது வழமையான இடமாற்றங்களிலொன்று என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனவரி 8 ம் திகதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மகிந்தராஜபக்ச இது குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவி;ல்லை என ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய அரசாங்க வட்டாரங்கள் தாங்கள் இதுகுறித்து அறிந்துள்ளதாகவும் எனினும் உறுதிப்படுத்த முடியாத நிலையிலுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதியை முன்னைய அரசாங்கத்திலிருந்து வெளியேறச்செய்த பின்னர்,அவருக்கு ஆதரவு திரட்ட முயன்றார் என குற்றம்சாட்டிய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் புதுடில்லியை அவரை மீள அழைக்குமாறு கேட்டுக்கொண்டதாக இலங்கையிலும், புதுடில்லியிலும் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 28 ம் திகதி கொழும்பின் ஆங்கில பத்திரிகையொன்று இது குறித்த செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
இந்தியா இலங்கiயின் உள்விவகாரங்களில் எப்போதும் தலையிட்டுவந்துள்ளது.1987 இல் அமைதி ஒப்பந்தத்தின் பின்னர் அது படைகளை அனுப்பியது.
முன்னாள் ஜனாதிபதியின் அரசாங்கம் சீனாவின் பக்கம் சாய்வதாக இந்தியா கவலைகொள்ளதொடங்கியுள்ள சூழலிலேயே ராஜபக்சவின் தேர்தல் தோல்விஇடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் இந்தியாவிற்கு தெரிவிக்காமல் சீனாவின் இரு நீர்மூழ்கிகளை அவர் இலங்கைக்குள்ள அனுமதித்த பின்னரே இது குறித்த கரிசனைகள் அதிகரித்தன. இருநாடுகளுக்கும் இடையிவான ஓப்பந்தத்தின்படி அவர் இதனை இந்தியாவிற்கு தெரிவித்திருக்கவேண்டும்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி அடுத்தமாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.தனது வெளிpவிவாகர கொள்கையின் முதல் நோக்கம் இந்தியா என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளை பொதுவேட்பாளர் ஒருவரை ஏற்றுக்கொள்ளச்செய்ததற்காகவும்,அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மைத்திரிபாலசிறிசேனவை சந்தித்து கட்சி தாவலில் ஈடுபடச்செய்தமைக்காகவுமே குறிப்பிட்ட ரோ அதிகாரி வெளியேற்றப்பட்டதாக ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட நபர் ரணில்விக்கிரமசிங்கவை தேர்தலில் போட்டியிடவேண்டாமென சம்மதிக்க வைத்ததாகவும்,இந்தியாவிற்கு நெருக்கமான இலங்கை அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் முன்னாள் ஜனாதிபதியுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தாகவும்.அவர் ரணிலுடன் பேசுவது,சந்திரிகாவுடன் பேசுவது,போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என அந்த அரசியல்வாதி ரொய்ட்டருக்கு தெரிவித்தார்.