செய்திகள்

மகிந்த ராஜபக்‌ஷவின் தங்காலை இல்லத்தில் பொலிஸார் அதிரடிச் சோதனை! தேடிய கார் கிடைக்கவில்லை

தென்னிலங்கையின் தங்காலைப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் கால்ட்டன் இல்லத்தில் பொலிஸார் இன்று அதிரடியாக சோதனை நடத்தியுள்ளார்கள். மகிந்தவின் புல்வர்களால் பயன்படுத்தப்பட்ட லம்போகினி ரக கார் ஒன்றைத் தேடியே இந்தத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

லம்போகினி ரக கார் ஒன்று மகிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தங்காலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே நீதிமன்ற அனுமதியுடன் இந்த அதிரடிச் சோதனை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் இந்தச் சோதனை நடவடிக்கையின் போது அவ்வாறான கார்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். இவ்வாறான கார் ஒன்று ஏற்கனவே கொழும்பு, தெமட்டக்கொட பகுதியில் கைப்பற்றப்பட்டது.