செய்திகள்

மகேந்திரசிங் தோனியை கனவான் என்கிறார் பிரட் ஹடின்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து தீடீர் ஓய்வை அறிவித்துள்ள மகேந்திரசிங் தோனியை கனவான் என அவுஸ்திரேலிய அணியின் விக்கட்காப்பாளர் பிரட் ஹடின் வர்ணித்துள்ளார்.
டோனியின் பொறுமை, நிதானம் என்பவற்றையும் பாராட்டியுள்ள அவர் டோனியின் மிகப்பெரும் பலமே அந்த பொறுமை எனவும் தெரிவித்துள்ளார்.
போட்டி எந்த திசையில் சென்றுகொண்டிருக்கின்றது என்பதை ஊகிக்க முடியாத சூழலிலும்,அவர் நிதானமாகவும், பொறுமையுடனும் காணப்படுவார்.அதன் காரணமாகவே அவரால் நீண்ட காலம் கிரிக்கெட்டில் நிலைத்திருக்க முடிந்தது எனவும் ஹடின் தெரிவித்துள்ளார்.
அவர் ஓய்வுபெறுவது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது. அவர்அணித்தலைவராக நடந்துகொள்ளும் முறை, அந்த நிதானம் அமைதி என்பன மிகப்பெரிய விடயங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.