செய்திகள்

மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது, பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்: மகிந்த

“மக்களின் கோரிக்கையை என்னால் தொடர்ந்தும் நிராகரிக்க முடியாது. பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இன்று அறிவித்திருக்கின்றார்.

தென்பகுதியிலுள்ள மெதனமுலயில் இன்று காலை இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தனது உரையில் தெரிவித்ததாவது:

“நான் எனது நாட்டுக்கு கனவிலும் துரோகம் இழைக்கவில்லை. தீவிரவாதத்தை ஒழித்து நாட்டை காப்பாற்றி தீவிரவாதிகளுக்கு  நட்டஈடு வழங்க கூறினேன் தற்போதைய பிரதமர் ரகசிய ஒப்பந்தங்களை செய்த ஒருவர்.

அமெரிக்காவின் பாதுகாப்பு எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாது வேலைசெய்கின்றனர். மக்களுக்கு தண்டனை வழங்கியதையும், கொள்ளையடித்தவர்களையும் இளைஞர்கள் காணவில்லை. நாட்டை இரண்டாக வேறுபடுத்த நினைத்ததை இளைஞர்கள் காணவில்லை. 1990 இல் இளைஞர்களை காப்பாற்ற ஜெனீவாவுக்கு சென்றோம். பாதயாத்திரை மேற்கொண்டோம். வாரலாற்றில் நாம் செய்த புரட்சியை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்கவில்லை. வடக்கில் ராணுவத்தை அகற்றி மக்களை அச்சத்திலிருந்து விளக்கினோம்.

நூறு நாள் திட்டத்தில் மத்தியவங்கி கொள்ளையை மறைத்தார்கள். இதுதான் மிகப்பெரிய கொள்ளை. எனது அரசாங்கத்தில் செய்த வேலைகளை தாம் செய்ததாக செய்கிறார்கள். இது எனது நாடு என்று மக்கள் நினைக் கவில்லை. கொழும்பு உலகத்திலேயே அபிவிருத்தியடைந்துவரும் நாடு என்று உலகம் கூறியது.  நாம் அதற்காக பெரும்பாடுபட்டோம்.

யாப்புக்கு அப்பால் நாம் செல்லவில்லை.பலிவாங்கல்களே இன்று  நடக்கிறது. மீண்டும் இந்த நிலைக்கு இட்டுசெல்ல முடியாது. நான் பதவியை விட்டு கிராமத்துக்கு வந்தாலும் எனது நாட்டு மக்கள் என்மீது கொண்ட அன்பால் இன்றும் என்னை ஆதரிக்கிறார்கள்.

நுகேகொடையில் ஆரம்பித்த மக்கள் கூட்டம் இன்று மகா பரிணாமமாய் உருவெடுத்து வீடுவரை வந்துள்ளது. நீங்கள் எனக்கு விடுத்த வேண்டுகோளை நான் நிராகரிக்கமாட்டேன் அதற்கான உரிமை எனக்கில்லை எனவே. அடுத்த தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என்பதை  இந்த மெதமுலனையில் வைத்து கூறுகிறேன்.

ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் பொதுத்தேர்தலில் ஒன்றுபடுவோம். எங்களுக்கு ஒரு ஒப்பந்தமே இருக்கிறது. அதுதான் மக்களுடனான ஒப்பந்தம். எங்களுக்குள்ள முரண்பாடுகளை நீக்கி ஒன்றுபட்டு எனக்காக பூஜைசெய்த மகாநாயக்க தேரர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் அனைவரும் ஒன்றுசேருவோம்.”

05

 

04

 

03