செய்திகள்

மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடே இனப்படுகொலை குறித்த தீர்மானம்: ஜனாதிபதியிடம் முதலமைச்சர் (படங்கள்)

ஒட்டுமொத்த வடக்கு மக்களின் உணர்வின் வெளிப்பாடே வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருக்கின்றார்.

இன்று பிற்பகல் வடக்கு மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் எனத் தெரியவருகின்றது.

இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள் பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இதன்பின்னர் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

5-2

4-2