செய்திகள்

மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் செயற்பாட்டாளர் அசேல சம்பத் கைது!

மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் செயற்பாட்டாளர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு -கோட்டை பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அவர் கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)