செய்திகள்

மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு: வாக்குப் பதிவு விகிதமும் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 04.00 மணிவரை மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யமுடியும். வழமையைவிட காலைநேர வாக்குப் பதிவு அதிகமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இன்று காலை 10.00 மணிவரை களுத்துறையில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும், காலியில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும், மட்டக்களப்பில் 11.7 சதவீத வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 11 மணிவரை 20 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் முற்பகல் 11 மணிவரை 13.38 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் கம்பஹாவில் 35 சதவீத வாக்குகளும், ஹம்பாந்தோட்டையில் 35 சதவீத வாக்குகளும், வவுனியாவில் 30 சதவீத வாக்குகளும், குருநாகலில் 32 சதவீத வாக்குகளும், பதுளையில் 40 சதவீத வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 10.30 வரையான காலப்பகுதியில் கண்டியில் 40 சதவீதமும், மாத்தளையில் 40 சதவீதமும், மாத்தறையில் 27 சதவீதமும், கிளிநொச்சியில் 30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.