செய்திகள்

மங்களவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இந்தியாவுக்கு: சுஸ்மாவின் அழைப்பை ஏற்றார்

இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை புது டில்லிக்கு வருகை தருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள மங்கள சமரவீர எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி செல்லவிருக்கின்றது.

வெளிவிவகார அமைச்சராக நேற்று மாலை பொறுப்பேற்ற மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வாழ்த்துக் கூறியுள்ளார். இதன்போதே அவர், புதுடில்லிக்கு வருகை தருமாறு புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள மங்கள சமரவீர எதிர்வரும் 18 ஆம் திகரி புதுடில்லி செல்லவிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.