செய்திகள்

மடு தேவாலயத்துக்கு ஜனாதிபதி விஜயம்: ஆயர் ராயப்பு ஜோசப்புடனும் பேச்சு

வடபகுதியில் இன்று சூறாவழி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, மாலை மன்னார் சென்றபோது மடுதேவாலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். மன்னார் ஆயருடனும் அவர் பேச்சுக்களை நடத்தினார்.

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஜனாதிபதியை அங்கு வரவேற்றார். அங்கு இடம்பெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டு ஜனாதிபதி மடு அன்னையை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடினார்.  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அப்போது உடனிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இரண்டு தினங்களுக்கு முன்னர் மடுவுக்குச் சென்று மன்னார் ஆயரைச் சந்தித்திருந்தார்.