செய்திகள்

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு (படங்கள்)

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கில் செயற்பட்டுவரும் ஈஸ்ரன் சுப்பர் கிங் இளைஞர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததானமூகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் கழகங்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இருதயபுரம் கிழக்கு ஈஸ்ரன் சுப்பர் கிங் இளைஞர்கள் கழகம் வருடாந்தம் பல சமூக பணிகளை முன்னெடுத்துவருகின்றது.

இதன்கீழ் இன்று காலை முதல் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.

ஈஸ்ரன் சுப்பர் கிங் இளைஞர்கள் கழகத்தின் தலைவர் வி.வேணுதரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் மட்டக்களப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் வி.கணேசானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் டாக்டர் க.விவேக் மற்றும் தாதியர்களும் கலந்துகொண்டனர்.

இன்று காலை 10.00மணி முதல் பிற்பகல் 1.00மணி வரை சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இரத்தம் வழங்கியதாக டாக்டர் விவேக் தெரிவித்தார்.

 IMG_0139 IMG_0156 IMG_0167 IMG_0170 IMG_0174