செய்திகள்

மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு நகரில் பெண்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட கொமர்சியல் கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் சில ஊழியர்கள் மற்றும் மோசடிகளில் மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்ககோரி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் பிரதேச பெண்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லடி,வேலூரில் உள்ள பெண்னொருவரும் கொமர்சியல் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் சில ஊழியர்களும் இணைந்து பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் பல முறைப்பாடுகளை குறித்த நிறுவனத்திடம் தெரிவித்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

இன்று காலை கொமர்சியல் கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் முன்பாக இதுதொடர்பில்ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கையெடுத்தபோது குறித்த பெண் தான் பணத்தினை தருவதாகவும் வீட்டுக்கு வருமர்றும் அழைத்த நிலையில் வீட்டுக்கு சென்றபோது பெண்கள் மீது குறித்த பெண் தாக்குதல் நடத்தியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இதற்கு எதிராக மட்டக்களப்பில் உள்ள வேலூரில் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் பெணின் வீட்டுக்கு முன்பாக கூடிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தங்களது பணங்களைகொள்ளையடித்துக்கொண்டு தங்களை தாக்கிய பெண்ணை கைதுசெய்யும் வரையில் தாங்கள் போராட்டங்களை மேற்கொள்ளப்போவதாக பெண்கள் தெரிவித்தனர்.

மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியில் கடன்களைப்பெற்று அவற்றின் மூலம் மாதம் மாதம் பெறும் பணத்தினை குறித்த நிறுவனத்துக்கு செலுத்திவந்தபோதும் அந்த பணத்தினை குறித்த பெண்ணும் சில கொமர்சியல் கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் ஊழியர்களும் இணைந்து மோசடி செய்துள்ளதாகவும் அதன் காரணமாக தாங்கள் கட்டிய பணம் குறித்த நிறுவனத்தில் செலுத்தப்படவில்லையெனவும் இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணைசெய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்களையும் பொலிஸ் நிலையம் வருமாறு கோரிய நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

IMG_0008

IMG_0014

IMG_0039

IMG_0026