செய்திகள்

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு, கூழாவடி பகுதியில் வெடிக்காத மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கூழாவடி புகையிரத தண்டவாளத்துக்கு அருகிலிருந்து இன்று வியாழக்கிழமை (16) மீட்கப்பட்ட இந்த மோட்டார் குண்டு, பாதுகாப்பான முறையில் திராய்மடுப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
000

000