செய்திகள்

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு விளக்க மறியல்

மட்டக்களப்பு,வந்தாறுமூலையில் வைத்து 14வயது சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய இளைஞரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் பழுகாமத்தினை சேர்ந்த 14வயது சிறுமி அம்பிளாந்துறையை சேர்ந்த 19வது இளைஞன் காணாமல்போனமை தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த இளைஞன் குறித்த சிறுமியுடன் நிந்தவூர் பகுதியில் மறைந்திருந்து பின்னர் வந்தாறுமூலைப்பகுதிக்கு சென்று அங்கு மறைந்திருந்த நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.