செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட முதலாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் (படங்கள்)

புதிய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் மட்டக்களப்பு மாவடடத்தில் முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

நூறு நாள் வேலைத்திட்டத்தின் முன்னெடுக்கப்பட்டுள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் கூட்டமாக இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டின் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்காக 194 மில்லியன் ரூபாவினை ஒதுக்கிடுசெய்துள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிராமத்துக்கு ஓரு திட்டம் வேலைத்திட்டத்தின் கீழ் 43மில்லியனும் சமுர்த்தி திணைக்களம் ஊடாக மில்லியனும் வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக 111மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடுசெய்யப்பட்டள்ளது.
இதன்போது போரதீவுப்பற்றில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

IMG_0238 IMG_0240 IMG_0241 IMG_0244