செய்திகள்

மண்மேடு மீது மோதிய பஸ்! ஐவர் படுகாயம் (படங்கள்)

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் மண் மேடு ஒன்றில் பஸ் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாவலப்பிட்டியிலிருந்து டயகம நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸே 10.04.2015 அன்று மாலை 6 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பஸ் சாரதியை திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_0329

IMG_0333