செய்திகள்

மத்தள விமான நிலையம் அமைக்கும் போது நூற்றுக்கணக்கான மயில்களை அரசாங்கம் கொன்றதாம் : தகவல் வெளியிட்டுள்ள ஜனாதிபதி

தெற்கில் விமான நிலையத்தை அமைக்கும் போது கடந்த அரசாங்கத்தில் நூற்றுக்கணக்கான மயில்க்ள கொல்லப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
இன்று பொலனறுவையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தெற்கில் விமான நிலையத்தை அமைக்கும் போது சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்படவில்லை. இதனை அமைக்கும் போது குமன சரணாலயத்திலுள்ள பறவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விமானங்கள் பறக்கும் போது தடையாக அமையுமென நூற்றுக்கணக்கான மயில்கள் கொல்லப்பட்டுள்ளன. இதுவே நடந்த உண்மை என அவர் தெரிவித்துள்ளார்.