செய்திகள்

மத்திய அரசின் நிலம் கையகபடுத்துதல் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் பேரணி

மத்திய அரசின் நிலம் கையகபடுத்தும் சட்டத்தை எதிர்த்து குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி எதிர்கட்சிகள் டெல்லியில் பேரணியை மேற்கொண்டனர். பேரணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் சந்தித்து நில கையப்படுத்தும் மசோதாவுக்கு  ஒப்புதல் அளிக்கக்கூடாது என கோரிக்கை மனுவையும் கையளித்துள்ளார்கள்.