செய்திகள்

மத்திய வங்கி ஆளுனருக்கு எதிரான யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனை அந்த பதியிலிருந்த நீக்குமாறு கோரி எதிர்க்கட்சியின் 90 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய யோசனை கடிதமொன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் சம்ர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் இந்த கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அநத யோசனையை பாரராளுமன்றத்தில் நிறைவெற்றி பின்னர் ஜனாதிபதியிடம் கையளித்து அவர் மூலம் மத்திய வங்கி அறுனரை பதவி விலக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பியான பந்தல குணவர்தன தெரிவித்துள்ளர்.
அர்ஜுன மகேந்திரன் என்பவர் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் எனவும் அவ்வாறானவர் குறித்த பதவியில் இருப்பது சட்ட விரோதம் எனவும் இதனாலே அவரை பதவி விலக்க கொரியுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.