செய்திகள்

மத தினங்களால் ஒரு வாரம் வங்கிகள் செயல்படாது என்ற தகவலால் பதட்டம்

ராமநவமி, புனித வெள்ளி, மகாவீர் ஜெயந்தி என தொடரும் மத தினங்களால்,  இடையில் ஒரு நாள் தவிர்த்து ஒரு வாரம்  வங்கிகள் செயல்படாது என்ற தகவல் பரவி பீதியை கிளப்பியிருக்கிறது.

இந்த செய்தியால் பெரும் பணத்தை கையாளும் வியாபார நிறுவனங்கள் மட்டுமல்ல. அவ்வப்போது ஏ.டி.எம்.மில் பணத்தைத் துடைத்தெடுக்கும் அன்றாடங்காய்ச்சிகள் வரை பயத்தில் இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு துறையினர் வேலை நிறுத்தம் செய்தால், “இன்று இத்தனை கோடி வருமான இழப்பு” என்று செய்திகள் வருகின்றன. அப்படியானால் மத நாட்களுக்காக விடப்படும் விடுமுறைகளால் எத்தனை எத்தனை கோடி இழப்பு. மனித சக்தி எவ்வளவு வீணாகிறது. எத்தனை வேலைகள் பாதிக்கின்றன என்ற கருத்து நிலவி வருகின்றதுஇ அவசர உலகத்தில் இத்தனை தேவையற்ற விடுமுறைகள்! உலகத்திலேயே அரசு விடுமுறை அளிப்பதில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

இப்படி அதிக விடுமுறைகளுக்கு பதிலாக, மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு மூன்று நாட்கள் பண்டிகை விடுமுறை அளிக்கவேண்டும். அது எந்தெந்த பண்டிகை என்று ஊழியர்களே முடிவு செய்யலாம். அதனால் அனைத்து மத விழா நாட்களிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும். தேவையின்றி மாற்று மதத்தினர் வீட்டில் வெட்டியாய் பொழுதைக் கழிக்கத் தேவையிருக்காது. அதே போல தலைவர்களின் பிறந்த இறந்த நாளுக்கு அரசு விடுமுறை விடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்டுகின்றன.