செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கருத்தறிவதற்கு நடவடிக்கை

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்தறிவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 9 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

மாவட்ட ரீதியான கருத்தறியும் நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கருத்தறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்ந்தும் தனி நபர்கள் மற்றும் அமைப்புக்களிடமும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்துக்களை கேட்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசியலமைப்புத் திருத்ததக் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.

n10