செய்திகள்

மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு நெருங்கும் நேரத்தில் வெளிப்படைதன்மையே முக்கியமானது

பிரட் அடம்ஸ்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர்

ஜனவரி 10 ம் திகதி இலங்கை முக்கியமான மாற்றமொன்றை சந்தித்தது,10 வருடகாலமா ஏதேச்சதிகார போக்குடைய அரசாங்கத்தின் ஆட்சிக்கு பின்னர் புதிய அரசாங்கமொன்றிற்கு மக்கள் வாக்களித்திருந்தனர்.புதிய அரசாங்கம் உடனடியாக முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தின் பல தவறுகளை சரிசெய்ய ஆரம்பித்தது,இதில் உள்நாட்டு சுயாதீன அமைப்புகள் மற்றும்சர்வதேசசமூகம் குறித்த வெளிப்படைத்தன்மையும் ஓன்று.

இந்த மாற்றங்களை தெளிவாக வெளிப்படுத்தும் விதத்தில் புதிய அரசாங்கம் கடந்த ஓக்டோபரில் ஐக்கிய நாடுக்ள மனித உரிமை பேரவையில் நிலைமாற்றுகால நீதிக்கு இணங்கியது.

இலங்கை அரசாங்கம் அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான நடவடிக்கைகளை கையாண்;ட விதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் ஓரு விடயமாக காணப்படுகின்றது.இந்த வருடத்தின் முதல் இரு மாதங்களில் இடம்பெற்ற இந்த கலந்தாய்வு நடவடிக்கைகள் வெளிப்படை தன்மை மிக்கவையாக காணப்பட்டன, செயற்பாட்டாளர்கள் இதனை வெற்றிகரமான நடவடிக்கை என வர்ணித்துள்ளனர்.

எனினும் இலங்கையின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்திற்கான காரணங்களிற்கு தீர்வை காண்பதற்கான முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் விடயத்தில் பாரிய சவால்கள் இன்னமும் காணப்படுகின்றன.

உதாரணத்திற்கு மனித உரிமை பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் குறைந்தளவு முன்னேற்றத்தையே காண்பித்துள்ளது.இந்த நடவடிக்கை இரகசியத்தினால் மறைக்கப்பட்டதாக காணப்படுகின்றது.அரசாங்கம் பொதுமக்களுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அதேவேளை தீர்மானத்தின் நான்கு தூண்களான உண்மை, நீதி, நஸ்டஈடு,மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்துதல் என்பவற்றை கையாள்வதற்காக அரசாங்கம் தனிப்பட்ட குழுவொன்றை நியமித்துள்ளது போல தோன்றுகின்றது.

இந்த குழுவில் யார் அங்கத்துவம் வகிக்கின்றனர், குறிப்பிட்ட குழு என்ன செய்கின்றது அதன் ஆணை என்னவென்பது குறித்து பல ஊகங்கள் காணப்படுகின்றன.குறிப்பிட்ட குழு குறித்து அரசாங்கம் வெளிப்படையாக எதனையும் அறிவிக்காததே இந்த ஊகங்கள் வதந்திகளிற்கு காரணம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அடுத்த அமர்விற்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் யார்? அவர்கள் என்னசெய்கிறார்கள் என்பது குறித்த விடயங்களை பகிரங்கப்படுத்தவேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது.அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சில சர்வதே அமைப்புகளே இவ்வாறான குழுவொன்றின் கட்டமைப்பு குறித்து தங்களிற்குகூட எதுவும் தெரியாது என தெரிவிக்கின்றன.

ஜெனீவா தீர்மானம் குறித்த ஏனைய விடயங்களிற்கும் இது பொருந்தும்,தீர்மானத்தின் நான்கு தூண்கள் குறித்து மக்களுடன் மேற்கொள்ளப்படும் கலந்தாய்வு பகிரங்கமானதாக காணப்படவேண்டிய அதேவேளை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை கையாள்வதற்கு  உருவாக்கப்பட்டுள்ள குழுவின் செயற்பாடுகள் இரகசியமானவையாக காணப்படுகின்றன.மேலும் கலந்தாய்வு நடவடிக்கைகள் ஏன் தாமதமாகின்றன என்பதற்கான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை,இந்த கலந்தாய்வு நடவடிக்கைகள் மே மாதம் ஆரம்பித்து ஆகஸ்டில் முடிவடையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தின் பல வருட  விட்டுக்கொடுக்காத தன்மைக்கு பின்னர் அரசாங்கம் புதிய  நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்ப முயன்று வருகின்றது,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அடுத்த அமர்வு யூனில் இடம்பெறவுள்ள நிலையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தான் எடுத்துள்ள நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது.

அரசாங்கம் இதனை செய்யத்தவறியதன் காரணமாக சமூகத்தின் சில பிரிவினரின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்கள் முஸ்லீம்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வதந்திகளிற்கு முடிவு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும், தனது நடவடிக்கைகள் குறித்;து பகிரங் அறிவிப்பை வெளியிடவேண்டும்.