செய்திகள்

மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் இன்று பதிலளிப்பார்!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த வாய்மூலமான அறிக்கை தொடர்பில் இன்று பதிலளிக்கப்படவுள்ளது.

பேரவையின் 48 ஆவது அமர்வு நேற்று ஆரம்பமான போது, மனித உரிமைகள் ஆணையாளர், தனது வருடாந்த அறிக்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட விடயங்களை முன்வைத்தார்.

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவர் பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சர் அந்த அமர்வில் வீடியோ மூலம் கலந்துகொண்டு பதிலளிக்கவுள்ளார்.

இன்று மாலை அவர் அந்த பேரவையில் உரையாற்றுவார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
-(3)