செய்திகள்

மனித உரிமை கவுன்சிலின் அமர்வில் இந்தியாவின் ஆதரவை பெற முயற்சி

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின் போது எதிர்வரும் மார்ச்சமாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமை கவுன்சிலின் அமர்வில் இந்தியாவின் ஆதரவை கொழும்புகோரவுள்ளதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
அமைச்சர் மங்கள சமரவீரவின் விஜயத்தின் போது புதுடில்லியுடன் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு எண்ணியுள்ளதாக கொழும்பின் வெளிவிவகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விஜயத்தி;ன் போது மார்ச்மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமை கவுன்சிலின் அமர்வில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறும்.
இலங்கையின் மனித உரிமை நிலவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவும்,சிறுபான்மை சமூகத்தினரி;ன் கரிசனைகளுக்கு தீர்வு காணவும் புதிய அரசாங்கம் ஆர்வமாகவுள்ளதாகவும், புதுடில்லி இதனை அறியவேண்டும் என மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் விரும்புவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை இந்த சந்திப்புகளின் போது இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து அறிய முயலவுள்ளதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.