செய்திகள்

மன்னாரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மன்னாரில் புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் உள்ளடங்களாக இந்த மாதத்தில் இதுவரை 114 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 456 பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்க உள்ளன. இதேவேளை மன்னாரில் இயங்குகின்ற ஆடைத் தொழிற்சாலையை, சுகாதார பிரிவினர் தொடர் கண்காணித்து வருகின்றனர்.

அத்துடன் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 23 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களில் முதல் தொடர்பாளர்கள், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.(15)