செய்திகள்

மன்னிப்புக் கோரிய கமல்

கமல் நடிப்பில் தற்போது வெளிவரத் தயாராக இருக்கும் பாபநாசம் திரைப்பட சுவரெட்டிகளில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவதுபோல இடம்பெற்றிருந்த தனது படங்களுக்காக மன்னிப்பு கோரினார் கமல்ஹாஸன்.

தமிழகத்தில் வரும் ஜூலை முதல் கட்டாய தலைக்கவச சட்டம் அமலுக்கு வரவிருக்கும் இந்நிலையில் தன்னுடைய படத்தில் இந்த மாதிரியான காட்சியில் தலைக்கவசம் அணியாமல் நடித்ததற்காக வருந்துவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.