செய்திகள்

மயூரன் சுகுமாரனிற்கு மரணதண்டனையை நிறைவேற்ற உத்தரவு

போதைப்பொருள் கடத்தியதற்காக மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள மயூரன் சுகுமாரன் உட்பட மூவருக்கு தண்டனையை நிறைவேற்றப்போவதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.
ஆஸி பிரஜைகளான மயூரன் சுகுமாரன்,அன்றூசான் மற்றும் பிலிப்பைன்ஸ் பெண்யொருவருக்கும் அதிகாரிகள் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை அதிகாரிகள் குறித்து தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்தோனேசிய சட்டத்தின்படி தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் குற்றவாளிகளுக்கு அது குறித்து அறிவிக்கவேண்டும்.
மத்திய ஜாவாவிலுள்ள நுசா கம்பன்கன் சிறையில் இரு ஆஸி பிரஜைகளுக்கும் மரணதண்டனையை விரைவில் நிறைவேற்றவுள்ளதாக அதிகாரிகள் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களை மன்னிக்குமாறு தான் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்சை சேர்ந்த வெலோசோ என்ற பெண்ணிற்கும் மரணதண்டனை உறுதியாகியுள்ள நிலையில் அவரை பார்ப்பதற்காக குடும்பத்தவர்கள் இந்தோனேசியா சென்றுள்ளனர்.