செய்திகள்

மருதானையில் கட்டிடமொன்றில் தீ விபத்து : மூவர் தீயில் சிக்கி பலி (படங்கள்)

கொழும்பு மருதானை பகுதியில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருதானை தொழிநுட்ப சந்திக்கும்  எல்பின்ஸ்டன் கலையரங்கு சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்ட போது குறித்த கட்டிடத்துக்குள் மூவர் சிக்கிக் கொண்டதுடன் அவர் தீயில் சிக்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களின் சடலங்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மருதானை பொலிஸார் விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.

01

00001

000-1