செய்திகள்

மருத்துவ வளர்ச்சி காரணமாக மனவளர்ச்சி குறைந்தோரின் ஆயுட்காலம் அதிகரிப்பு (படங்கள்)

மனவளர்ச்சி குறைந்த பிள்கைளின் ஆயுட்காலம் குறைவாகவிருக்கும் என்பது விஞ்ஞானிகள், மருத்துவர்களின் கருத்துக் கணிப்பாகவிருந்தது.

ஆனால் தற்போதைய மருத்துவ வளர்ச்சி காரணமாக அவர்களின் ஆயுட்காலம் நிச்சயமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன்.

யாழ்.கோண்டாவில் சிவபூமி தொழிற்பயிற்சிப் பாடசாலையின் திறப்பு விழா அண்மையில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி.ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறப்பான கல்வி ஒழுக்க விழுமியங்கள்,ஆன்மீகச் செயற்பாடுகள் என்பவற்றில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் மனங்களைக் குளிர்மைப்படுத்த முடியும்.இதன் பயனாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதுடன் மாத்திரமன்றி ஆயுட்காலமும் அதிகரித்துச் செல்வதை நாங்கள் விஞ்ஞான ரீதியாக நோக்க முடியும்.

அந்த வகையில் இந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தொழிற்பயிற்சிக் கூடம் இந்த மாணவர்களுக்கு ஒரு கொடை என்றே கூற வேண்டும்.

தொழிற்துறையில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனை இன்று பலர் மத்தியிலுமுள்ளது. மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சியை வழங்கி அவர்களை அந்தத் துறையில் வல்லுநர்களாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இன்று உலகளாவிய ரீதியில் வலுப் பெற்றுள்ளது.

இந் நிலையில் இலங்கையில் கூடத் தொழிற்பயிற்சியின் அவசியம் உணரப்பட்டுள்ளது.இவ்வாறான தொழிற்பயிற்சிக@டாகக் கல்வியை வழங்குவதற்குப் பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுகின்றன.கல்வி ஆணைக்குழுக்கள் இது தொடர்பாகப் பல்கலைக்கழகங்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.

கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுப் பத்து வருடங்களின் பின்னர் தொழிற்பயிற்சிக் கூடமொன்று ஆம்பித்துப் பிள்ளைகளிற்கு வேலை வாய்ப்புப் பெற்றுக் கொடுத்த எடுக்க நடவடிக்கை பாராட்டுதற்குரியது. ஆகவே இந் நிறுவனம் எதிர்காலத்தில் பாரிய தொழிற்பயிற்சி நிறுவனமாக மாற்றம் பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்றார்.

இந்த விழாவில் கொழும்பு மனித நேயம் அமைப்பின் தலைவர் வி.கயிலாசபிள்ளை அபிராமி தம்பதிகள் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணித்து வழங்கிய புதிய கட்டடத்தை நாடா வெட்டித் திறந்து வைத்தனர்.

சிறப்பு விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக முன்னாள் கணக்காளர் வைத்திலிங்கம் ஈழலிங்கம் தம்பதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

யாழ்.நகர் நிருபர்-

IMG_3346

IMG_3347

IMG_3350

IMG_3352

IMG_3353

IMG_3362

IMG_3365

IMG_3366

IMG_3367

IMG_3370

IMG_3371

IMG_3372

IMG_3375

IMG_3376

IMG_3379

IMG_3384

IMG_3388

IMG_3393

IMG_3397

IMG_3400

IMG_3401

IMG_3404